பக்கம்:நீலா மாலா.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

76 ஆனல், செத்த மனிதன் உடலிலே செய்ய என்ன உள்ளதோ? செருப்புக் கூடத் தைத்திடத் தீண்டு வாரும் இல்லையே ! ஆகையால், இருக்கும் போதே பிறருக்கு இயன்ற வரையில் உதவுவோம். இப்படி ஒரு பாட்டு அந்தப் புத்தகத்திலே இருக்கிறது. அதைக் கேட்டதிலேயிருந்து, என் மனசே மாறிவிட்டது. எனக்கோ அடிக்கடி தலை சுற்றல், மயக்கம் எல்லாம் வருகிறது. காளைக்கே கான் திடீரென்று போனுலும் போய்விடுவேன் ...' பார்வதி அம்மாள் இப்படிச் சொன்னதும், நீலா 'அம்மா'இப்படியெல்லாம் சொல்லாதீர்கள்' என்று துடிதுடித்துக் கொண்டே, பார்வதி அம்மாளின் வாயைத் தன் சிறு கையால் பொத்தினுள்.

  • இல்லை நீலா! என்னலே யாருக்கு என்ன பிர யோசனம்: உயிரோடு இருக்கிறபோதே, உதவ வேண்டியவர்களுக்கு உதவாமல் போனேன்.”

போட்டி, தோன் நீலாவைச் சென்னைக்குக் கூட்டிப் போகச் சொல்லிவிட்டாயே! நீதான் நல்ல பாட்டி. இன்றைக்கே கான் என் அப்பாவுக்குக் கடிதம் எழுதப் போகிறேன். நீலாவும் எங்க ளோடே வரப்போவதைத் தெரிவிக்கப் போகி றேன்.” - !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/78&oldid=1021630" இலிருந்து மீள்விக்கப்பட்டது