பக்கம்:நீலா மாலா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவருக்காக வெளிவரும் ஒரு சி ந ந் த பத்திரிகை கோகுலம்’. அப்பத்திரிகையில் 1978ஆம் ஆண்டு நீலா மாலா' என்னும் இக் கதையை எட்டு மாதங்கள் தொடர்ந்து எழுதி வந்தேன். பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் படித்து மகிழ்ந்த கதிை, இப்போது புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. நீலா சின்னஞ் சிறு கிராமத்தைச் சேர்ந்த ஒர் ஏழைச் சிறுமி. மாலா, சென்னையிலுள்ள புகழ் பெற்ற ஒரு டாக்டரின் மகள். இருவரும் வேற். றுமையின்றிப் பழகுகின்றனர். இணைபிரியாத தோழிகளாகின்றனர். இருவரின் அன்பினுல் பல நன்மைகள் விளைகின்றன. அவர்களது நட்பினல் பல அற்புதங்கள் நிகழ்கின்றன. கதையில் வரும் நீலாவும் மாலாவும் நேரு பரிசு பெற்று, சோவியத் நாடு சென்று திரும்புகின்றனர். என் இனிய நண்பரும், சிறந்த கவிஞருமாகிய அமரர் நாக முத்தையா அவர்களின் மகள் செல்வி திலகவதி, 1971ஆம் ஆண்டு நேரு பரிசு பெற்று சோவியத் நாடு சென்று வந்தார். அவரிடம் இப் பரிசைப் பற்றியும், பயணத்தைப் பற்றியும் நேரிலே பல விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். சில புத்தகங்கள் மூலமாகவும் ஆர்த்தெக் முகாம் பற்றித் தெரிந்து கொண்டேன். கேட்டதும் படித்ததும் எனக்கு மிகவும் பயன் பட்டன. விமானத்தில் வரும்போது நீலாவின் வலது கண்ணுக்கு விபத்து ஏற்பட்டுப் பார்வையை அவள் இழக்கிருள். இழந்த பார்வையை ஒரு மாதத்தில் மீண்டும் பெற்றுவிடுகிருள். இறந்த ஒருவரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/8&oldid=795884" இலிருந்து மீள்விக்கப்பட்டது