பக்கம்:நீலா மாலா.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

81 போகும்? அதுதான் தெரியவில்லை' என்று ஏக்கத் உடனே மாலா, முரளி! நாங்கள் இருக்கிற அண்ணு நகரிலே கவிமணி குழந்தைகள் சங்கம்’ என்று ஒரு சங்கம் இருக்கிறது. அங்கே என்னைப் போல் குழந்தைகள் எல்லாம் அடிக்கடி கூடுவோம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் யாராவது ஒர் எழுத்தாளர் வந்து கதை சொல்லுவார். காங்களும் கதை சொல்லுவோம்; பாட்டுப் பாடுவோம்; காடகம் கூடப் போடுவோம். அதுமாதிரி ஒரு சங்கத்தைப் பூங்குடியிலும் நாம் ஆரம்பித்தால் என்ன?’ என்று கேட்டாள். 'ஆஹா ஆஹா! அருமையான யோசனை' என்று கூறிக்கொண்டே குதித்து எழுந்தான் முரளி. மறுவிகாடி, டங்'கென்ற சத்தம் கேட்டது. வண்டியில் உட்கார்ந்திருக்கிருேம் என்பதை மறந்து முரளி எழுந்ததால், அவன் தலை வண்டி யின் மேல் பாகத்தில் உள்ள சட்டத்தில் பலமாக மோதிவிட்டது! அதைக் கண் டு எல்லாரும் வயிறு குலுங்கச் சிரித்தனர். கெல்லிக்காய் அளவு அவனது உச்சந்தலை புடைத்திருப்பதைக் கண்ட பிறகுதான் அவர்களது சிரிப்பு அடங்கியது. 'பாவம்" என்று மாலாவின் அம்மா புடைத்த இடத்தைத் தடவிக் கொடுத்தாள். ஆ ன லும் முரளி அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.'வீட்டுக் குப்போய் மருந்து போட்டால் சரியாகிவிடும்" என்று சமாதானம் கூறிக்கொண்டான். பிறகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/83&oldid=1021637" இலிருந்து மீள்விக்கப்பட்டது