பக்கம்:நீலா மாலா.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

85 " மாமரத்திலிருந்து அந்தக் குயில் கூவுவதால் மாங்குயில் சிறுவர் சங்கம்’ என்று பெயர் வைக் கலாம்’ என்ருள்.

  • நல்ல பெயர் ’, அழகான பெயர் ’ என்று. எல்லாரும் ஆமோதித்தனர்.
  • சரி, நம் சங்கத்துக்கு மாங்குயில் சிறுவர் சங்கம் என்று பெயர் வைத்துவிட்டோம். இனி, சங்கத்துக்குத் தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர் ஆகியோரைத் தேர்க் தெடுக்க வேண்டும் ' என்ருர் தலைமை ஆசிரியர்.

தலைமை ஆசிரியரையே சங்கத்தின் தலைவராக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். முரளியைச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தார்கள். செல்விதான் பொருளாளர். கிராமத்தின் எட்டுப் பகுதிகளுக்கும் எட்டுச் சிறுவர்களைச் செயற்கு ழ உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தார்கள். பிறகு, லட்டு, வடை, காப்பி யுடன் அமைப்புக் கூட்டம் இனிது முடிந்தது. அன்று இரவு மாலா, நீலா, முரளி மூவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, நீலா, காம் ஊருக்குப் போவதற்குள் நம் சங்கத் துவக்க விழாவை ஜாம் ஜாமென்று நடத்திவிட வேண்டும். துவக்க விழாவில் நாமெல்லாம் சேர்ந்து ஒரு காடகம் கடத்தினுல் எவ்வளவு நன்ருக இருக்கும்' என்று ஆசையோடு கூறினுள் மாலா " நாடகமா? யார் எழுதிய நாடகத்தை கடத்து வது?’ என்று கேட்டான் முரளி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/87&oldid=1021643" இலிருந்து மீள்விக்கப்பட்டது