பக்கம்:நீலா மாலா.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

89 களிலே நடித்ததாகக்கூடச் சொன்னயே. நீயே இதை நாடகமாக எழுதிப் பாரேன்” என்ருள் நீலா, மறுநாள் காலை பரமசிவம் பிள்ளை வீட்டுக்குள் நீலா நுழைந்ததும், மாலா நீளமான கோட்டுப் புத்த கம் ஒன்றை அவளிடம் நீட்டினுள். அதன் முகப்பில் இருந்த படத்தை நீலா பார்த் ததும், அடடே, கதையில் வருகிற திருடனை நேரிலே பார்த்த மாதிரி வரைந்திருக்கிருயே! பணக் கார வீட்டிலே திருட வந்த அவன் கையிலே டார்ச் விளக்கு இருக்கிறது. அந்த விளக்கு வெளிச்சத் திலே ஒரு சிறுமி அடடா ! எவ்வளவு கன்ருக வரைந்திருக்கிருய்!” என்று பாராட்டிக் கொண்டே உள்ளே புரட்டினுள். - சில பக்கங்களே மாலா எழுதியிருந்தாள். உள்ளேயும் சில படங்கள் இருந்தன. அவள் எழுதியிருந்ததை நீலா படித்தாள். முதல் காட்சியே மிகவும் கன்ருக இருந்தது. மூன்று காட்சிகள் எழுதிவிட்டாயே! மிச்சத்தையும் இன்றே எழுதி விடு. நாடகம் பிரமாதமாக இருக்கும். சந்தேகமே இல்லை ” என்ருள் நீலா. ஏதோ எனக்குத் தெரிந்தபடி கிறுக்கியிருக் கிறேன். உங்கள் ஹெட்மாஸ்டரிடத்திலே காட்டு வோம். கன்ருக இருப்பதாக அவர் சொன்னல், நாடகமாகப் போடுவோம்” என்று அடக்கத்துடன் கூறினுள் மாலா. 2124–6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/91&oldid=1021647" இலிருந்து மீள்விக்கப்பட்டது