பக்கம்:நீலா மாலா.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

95 பள்ளிக்கூடத்தில் ஆண்டுக்கு ஒரு முறை நாடகம் கடக்கும். அந்த நாடகங்களில் முரளிக்குச் சிறு சிறு வேஷம்தான் கொடுப்பார்கள். ஆனாலும் காடகம் சம்பந்தமாக எங்த வேலை கொடுத்தாலும் ஆர்வத்தோடு செய்வான். அதனுல் அவனுக்கு டைரக்ஷன், ஒப்பனை, காட்சி அமைப்பு, ஒலி ஒளி அமைப்பு எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். அந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு மற்றக் குழந்தைகளுக்கு அவன் எப்படி எப்படி கடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தான். மூன்ரும் காள் காலையில், நாடக ஒத்திகை மாமரத்தடியில் கடந்து கொண்டிருந்தது. பரம சிவம் பிள்ளையும் மற்றக் குழந்தைகளும் அதைப் பார்த்துச் சுவைத்துக் கொண்டிருந்தார்கள். அப் போது தஞ்சாவூர் போயிருந்த தலைமை ஆசிரியர் அங்கே வந்தார். உடனே ஒத்திகையை நிறுத்தி விட்டு, வணக்கம் சார், வணக்கம் சார்’ என்று எல்லாரும் கைகூப்பி வரவேற்ருர்கள். உடனே அவர், 'ஏன் ஒத்திகையை கிறுத்தி விட்டீர்கள்? உம், நடத்துங்கள்’ என்ருர். தொடர்ந்து ஒத்திகை நடந்தது. குழந்தைகள் திக்கவில்லை; திணறவில்லை. கன்ருக மனப்பாடம் செய்திருந்ததால் அழகாகப் பேசினர்கள்; கூச்ச மில்லாமல் உணர்ச்சியோடு நடித்தார்கள். 'இவ்வளவு கன்ருகச் செய்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இதெல்லாம் உங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/97&oldid=1021655" இலிருந்து மீள்விக்கப்பட்டது