பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

பற்றியும் அரசிகளைப் பற்றியும் சொல்லி அவனுக்கு அரசியல் ஞானம் புகட்டினார்கள். அவனுடைய அறையில் நீண்ட மூக்குடன் கூடிய மாவீரர்களின் படங்கள் பலப்பல மாட்டி வைக்கப்பட்டிருந்தன. நீளமான மூக்குதான் ஒரு மனிதனுக்கு உண்மையான அழகு என்று அவன் எண்ணினான். அதனால் இந்த உல்கிமே கிடைத்தாலும் அவன் தன் மூக்கின் நீளத்தில் சிறிது கூடக் குறைவதை விரும்பமாட்டான்.

அவனுக்கு வயது இருபது ஆனபோது, அவனுடைய திருமணத்திற்கு ஒரு பெண் பார்க்க வேண்டும் என்ற எண்ண ம் அவனைப் பார்த்தவர்களுக்கெல்லாம் உண்டாயிற்று. இளவரசிகள் பலரின் உருவப் படங்கள் நெடுமாறனிடம் காட்டப்பட்டன. அப்படங்களிலே வசந்தகுமாரி என்ற இளவரசியின் உருவம் நெடுமாறனுக்கு மிகவும் பிடித்திருந்தது. பல ராஜ்யங்களுக்கு அதிபதியாக விளங்கும் ஒரு பெரிய மகாராஜாவின் மகள்தான் வசந்தகுமாரி! அவள் ஒரே பெண்ணாதலால் அந்த மகாராஜாவின் ராஜ்யத்திற்கும் அவளே வாரிசாக இருந்தாள். அவளுடைய செல்வ நிலையைப் பற்றி இளவரசன் நெடுமாறன் சிறிதும் எண்ணவில்லை. அவளுடைய அழகையே அவன் விரும்பினான்.

ஆனால் வசந்தகுமாரியின் மூக்கு மிகவும் சிறியது! மிகவும் அழகானதும் கூட! ராஜ சபையினருக்கு இது ஏமாற்றத்தைய அளித்தது. ராஜகுமாரனைச் சந்தோஷப் படுத்துவதற்காக சின்ன மூக்குடையவர்கள் ராஜ சபைக்கு வரும் போதெல்லாம் அனைவரும் வாய் கிழியச் சிரித்து சின்ன மூக்கர்களைக் கேலி பண்ணுவார்கள். அதுபோலவே அவர்கள் வசந்தகுமாரியின் சின்ன மூக்கையும் கேலி செய்து சிரித்தார்கள். நீளமூக்கு நெடுமாறனுக்கு இந்த நிகழ்ச்சி கோபத்தை உண்டாக்கியது. வசந்த குமாரியின் மூக்கைக் கேலி பண்ணிய இரண்டு அதிகாரிகளை அவன் உடனே வேலையிலிருந்து நீக்கிவிட்டான். அதைக் கண்டதும் மற்றவர்கள் இதைக்