பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10


"உலகப் பிரசித்தி பெற்ற எகிப்து தேசத்து அரசி கிளியோபாட்ரா குறுகிய மூக்குடையவளாகவே இருந்தாள் என சரித்திரக் குறிப்புகள் சொல்லுகின்றன,' என்றான் இன்னொருவன். வரவேற்கத்தக்க இவ்வார்த்தைகள் கூறிய நபர்களுக்கு நீளமூக்கு நெடுமாறன் நிறைய வெகுமதிகள் கொடுத்தான்.

தன்னை மணம் புரிந்து கொள்ள வேண்டுமென வசந்தகுமாரிக்கு நெடுமாறன் தூதுக் கோஷ்டி ஒன்றை அனுப்பினான். வசந்தகுமாரி அதற்குச் சம்மதித்துத்து அவர்களுடனேயே புறப்பட்டு நெடுமாறனின் நகருக்கு வந்தாள். ஒப்பற்ற பேரழகியாகிய அவளைக் காணப் பொறுமையின்றி நீள்மூக்கு நெடுமாறன் வெகு ஆவலோடு காத்திருந்தான். வழியிலேயே அவளைச் சந்திக்கவும் புறப்பட்டான். வழியில் கண்டு, அவளைப் பல்லக்கில் இருந்து இறக்குவதற்காக நெடுமாறன் சென்ற பொழுது, அவனுடைய விரோதியான பழைய மந்திரவாதி திடீரெனத் தோன்றி வசந்தகுமாரியைத் தூக்கிக் கொண்டு மறைந்து விட்டான். -

அதைக் கண்டு நெடுமாறன் அடைந்த வேதனை இவ்வளவு அவ்வளவு அல்ல. ஆனால், அவன் தன் வேதனையை அடக்கிக் கொண்டு இளவரசி வசந்த குமாரியை நாடெங்கும் தேட ஆரம்பித்தான். வசந்த குமாரியை மீட்காமல் அவ்ன் தன் அரண்மனைக்குத் திரும்பவே விரும்பவில்லை.

நெடுமாறன் தன் ராஜ பரிவாரங்களில் யாரும் தன்னுடன் இருக்கக் கூடாதென்று கூறி திருப்பி அனுப்பி விட்டான். குதிரையை அதன் விருப்பப்படி போக விட்டுவிட்டு அது போகும் இடங்களிலெல்லாம் அவன் வசந்தகுமாரியைத் தேடியலைந்தான்.

ஒருநாள் நெடுமாறன் ஒரு பெரிய சமவெளியில் சென்றான். ஒரு சிறு குடிசை கூட அவனது கண்களுக்குப் புலப்படவில்லை. இரவு