பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

சூழ்ந்தபோது அவனுக்கும் அவனுடைய குதிரைக்கும் பசி தாங்க முடியவில்லை. சிறிது துரத்தில் ஒரு குகையில் வெளிச்சம் தெரிவதைக் கண்டு நெடுமாறன் அவ்விடத்திற்கு விரைந்து சென்றான்.

அந்தக் குகையினுள் நெடுமாறன் நுழைந்தபோது, அங்கே ஒரு சிறு கிழவி இருப்பதைக் கண்டான். அக்கிழவி க்கு வயது நூறுக்கு மேலிருக்கும். தன் குகைக்குள் யார் வந்திருப்பதென்று பார்ப்பதற்காக அக்கிழவி தன் மூக்குக் கண்ணாடியை எடுத்தாள். அதை அவள் மாட்டிக் கொள்ளச் சிறிது கஷ்டமாக இருந்தது. ஏனெனில் அவளுடைய மூக்கு மிகச் சிறியதாகச் சப்பை மூக்கு போல இருந்தது. அவள் கண்ணாடியை மாட்டிக் கொண்டு நெடுமாறனைப் பார்த்தபோது இருவரும் ஒருவரையொருவர் பார்த்து, "ஆ! என்ன விசித்திரமான மூக்கு!” என்று கூறிச் சிரிக்கலானார்கள்.

“பாட்டீ! உங்கள் மூக்கைப்போல என் மூக்கு அவ்வளவு வேடிக்கையானதல்ல; ஆனால், மூக்கைப் பற்றி நாம் பிறகு பேசலாம். தயவு செய்து ஏதாவது சாப்பிடக் கொண்டு வாருங்கள். என் குதிரைக்கும் தீனி போட வேண்டும். ஏனெனில் எங்கள் இருவருக்குமே பசி காதை அடைக்கிறது.” என்றான் நீள்மூக்கு நெடுமாறன்.

"இதோ சாப்பாடு போடுகிறேன். உன் மூக்கு விசித்திரமாக இருந்தாலும், என் இறந்த நண்பருடைய மகன் நீ! எனக்கு அவரிடம் அன்பு மிக அதிகம்! அவருடைய மூக்கு அழகாகவும், பலமாகவும் இருக்கும்!" என்றாள் அந்தக் கிழவி. அவள் ஒரு வன தேவதை!

"அப்படியானால் என் மூக்கிற்கு என்ன குறைவு?" என்று கேட்டான் நீளமூக்கு நெடுமாறன்.

"குறையொன்றுமில்லை. கொஞ்சம் அதிகமாகத் தான் இருக்கிறது. அதனால் என்ன் வந்துவிட்டது? இன்னும் நீளமான மூக்கு இருந்தாலும் ஒருவன்