பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

அதனால் நெடுமாறன் தந்திரமாக, "பாட்டி! நீங்கள் சொல்லப் போகும் விஷயம் என் பசியை மறக்கச் செய்து அடக்கிவிடும். ஆனால், நம் பேச்சைக் கேட்டறிய முடியாத இந்த ஊமைப் பிராணிக்குப் பசி தாங்க முடியாது." என்று பண்பாகச் சொன்னான்.

தன் கதை சொல்லும் திறமைக்கு நெடுமாறன் வழங்கிய பாராட்டுரையைக் கேட்டு வனக்கிழவி மனங்குளிர்ந்து போனாள்.

"இளவரசே இனி நீ சிறிது நேரங்கூட காத்திருக்க வேண்டியதில்லை. உன் மூக்கு மிக நீள்மாக இருந்தாலும் நீ நல்ல குணமுடையவ்னாக இருப்பதால், உன் விருப்பத்தை நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சியே அடைவேன்” என்று சொல்லிவிட்டு வனக்கிழவி வேலைக்காரர்களைக் கூவியழைத்தாள்.

அவள் திரும்பித் திரும்பி தன் மூக்கைப் பற்றியே பேசுவது நெடுமாறனுக்கு எரிச்சல் உண்டாக்கியது. அது தன் நன்மைக்காகத்தான் என்பதை அவனால் உணர முடியவில்லை.

"இந்தக் கிழவி என்ன எப்பொழுது பார்த்தாலும் என் மூக்கு நீளம் நீளம் என்றே சொல்லிக் கொண்டிருக்கிறாள். ஏதோ அவளுக்குக் குறைகிறதை நான் திருடி எடுத்து வைத்துக் கொண்டதாக நினைப்பு போலும். எனக்கு மட்டும் இப்போது பசியாக இல்லாவிட்டால், இந்த வாயாடியை விட்டுப் போயே போய்விடுவேன். இதிலே அவள் தான் மிகக் குறைவாகப் பேசுவதாக வேறு நினைத்துக் கொண்டிருக்கிறாள்!” என்று நெடுமாறன் தனக்குள்ளேயே எண்ணிக் கொண்டான்.

அவன் இவ்வாறு சிந்தனையில் ஈடுபட்டிருக்கும் போதே வனக்கிழவி யின் வேலையாட்கள் அவன் எதிரில் சாப்பாடு கொண்டு வந்து பரிமாறினார்கள். நெடுமாறன் தன் பசிதீரச் சாப்பிட்டான். அவன் சாப்பிடும்போது வனக்கிழவி தன் வேலையாட்களிடம்