பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

'பாட்டி, என் மூக்கைப் பற்றியே பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். அது இருக்க வேண்டியபடி இருக்கிறது. அதைக் குறைத்துக் கொள்ள நான் விரும்பவேயில்லை!” என்றான் நீளமூக்கு நெடுமாறன்.

"ஓகோ! அதைப் பற்றிப் பேசினாலே உனக்குக் கோபம் வருகிறதோ ! நெடுமாறா! பாவம்! உன்னைக் கோபம் கொள்ளச் செய்ய வேண்டுமென்பது அல்ல என் நோக்கம். நான் உனக்கு நல்லது செய்யவே எண்ணுகிறேன். உன் மூக்கைக் கண்டு என்னால் அதிர்ச்சியடையாமல் இருக்க முடியவில்லை. உனக்குப் பிடிக்கவில்லை என்றால் அதைப் பற்றி நான் மேற்கொண்டு பேசவில்லை. உனக்குச் சப்பட்டையான மூக்குத்தான் இருக்கிறதென்று நான் எண்ணிக் கொள்கிறேன். உண்மையைச் சொல்லப் போனால் உன் மூக்கைக் கொண்டு மூன்று மூக்குகள் செய்யலாம்!” என்றாள் காட்டுக் கிழவி.

அவள் மேலும் தொடர்ந்து தன் மூக்கைப் பற்றியே பேசுவதைக் கேட்ட நெடுமாறன் கோபம் கொண்டு அங்கிருக்கப் பிடிக்காமல் குதிரை மேலேறிக் கொண்டு புறப்பட்டு விட்டான்.

வசந்த குமாரியைத் தேடிக் கொண்டு அவன் சென்ற ஊர்களிலெல்லாம் இருந்த மக்களுக்குப் பைத்தியமோ என்று நெடுமாறன் எண்ணினான். ஏனென்றால் அவன் மூக்கு அதிக நீளமாக