பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

இருப்பதாகவே பேசினார்கள் . அவனைப் பார்த்தவர்கள் எல்லாம் அவன் மூக்கைப் பற்றியே பேசிக் கொண்டார்கள். அவனுடைய ராஜ சபையினர், அவ்வளவு திறமையாக, அவன் நம்பும்படியாகப் போதித்து வைத்திருந்தார்கள். அவர்களுடைய புகழ்ச்சிகளைக் கேட்டு மனத்தேறிய நெடுமாறன் தன் மூக்கு உண்மையிலேயே நீண்டது என்பதை உணர முடியவில்லை.

கானகத்துக் குகையில் இருந்த கிழவித் தேவதை தன்னால் முடிந்தவரை அவனுக்கு நன்மை செய்ய முடிவு செய் தாள். அவள் இளவரசி வசந்த குமாரியைத் தேடிப் பிடித்து, நெடுமாறன் செல்லும் பாதையில் ஒரு பளிங்கு மண்டபத்தை உண்டாக்கி அதற்குள் வசந்த குமாரியை அடைத்து வைத்தாள். அந்தப் பளிங்கு மண்டபத்துக்குக் கதவுகளே கிடையாது. ஒரே ஒரு ஜன்னல் மட்டும் இருந்தது.

அந்தப் பளிங்கு மண்டபத்தையும் ஜன்னலில் வசந்தகுமாரியையும் கண்டதும் நெடுமாறனுக்கு ஒரே ஆனந்தமாக இருந்தது. அப்போது அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. அந்தப் பளிங்கு மண்டபத்தை உடைத்து வசந்த குமாரியை வெளிப்படுத்த அவனுக்குச் சக்தியில்லை.

வசந்தகுமாரி ஒரு புன்சிரிப்புடன் நெடுமாறனை நோக்கி ஜன்னல் வழியாகத் தன் கையை வெளியில் நீட்டினாள். அந்தக் கையை நெடுமாறன் அன்போடு பிடித்து ஆவலோடு தன் நெற்றியில் வைத்துக் கொள்ள முயன்ற போதெல்லாம், அந்தச் செந்தாமரைக் கையில் தன் சிறுவாயை வைத்து அவன் அன்பு முத்தமிடக் குனிந்த போதெல்லாம் முன்னே நீட்டிக் கொண்டிருந்த நீளமான மூக்குத் தடைப்படுத்தியது. அப்போதுதான் முதன் முதலாக நெடுமாற்ன் தன் மூக்கு அளவுக்கு மீறி நீளமானது என்பதை உணர்ந்தான். அவன் அந்த மூக்கைப் பிடித்து ஒரு பக்கமாக வளைத்துக் கொண்டு அவள்