பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23


அவர்கள் குடிசையருகில் வந்து சேர்ந்த சமயம், அசமந்த ராஜா தம் மனைவியிடம் 'நீ என் சின்னமகள் சந்திரிகாவை மட்டுமாவது திரும்பக் கூட்டிக்கொண்டு வந்திருக்கவேண்டும். மற்றவர்கள் தங்களைத் தவிர வேறு யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. ஆனால் சந்திரிகா..." என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது கதவு தடதடவென்று தட்டப்பட்டது. "யார் அது?” என்று கேட்டார் அசமந்தராஜர்.

"உங்கள் பெண்கள்”

இதைக் கேட்டதும் அகங்கார வல்லபி நடுங்கிப்போனாள் "கதவைத் திறக்காதீர்கள். இது அவர்களுடைய ஆவிகளாக இருக்கலாம்" என்றாள் அவள்.

அசமந்தராஜரும் அவளைப் போலவே ஒரு பெரிய கோழை. இல்லாவிட்டால் அவர் ஏன் நாட்டைவிட்டு ஓடி வரவேண்டும் "நீங்கள் என் பெண்கள் அல்ல” என்று அவர் சொன்னார்.

"அப்பா கதவு இடுக்கு வழியாகப் பாருங்கள்; என்னை நீங்கள் அடையாளம் தெரிந்து கொள்ளாவிட்டால் நன்றாக எங்களை அடித்து உதையுங்கள்” என்றாள் சந்திரிகா.

அகங்கார வல்லபி அவர்களைத் திரும்பிப் பார்த்து ஆனந்தப்படுவதுபோல் நடித்தாள். எதையோ மறந்துவிட்டதால் அதை எடுத்துக்கொண்டு போகத் தான்மட்டும் திரும்பி வந்ததாகச் சொன்னாள். மூன்று பெண்களும் அவள் சொன்னதை நம்புவது போல் காட்டிக்கொண்டு படுக்கச் சென்றார்கள். சந்திரிகா தன் அக்காள் இருவரையும் அவர்கள் சொன்னபடி பொம்மைகளும் விளையாட்டுச் சாமான்களும் கொடுக்கும்படி கேட்டாள். உடனே அவர்கள் கோபங் கொண்டு அவளை அடித்தார்கள். அடிவலி தாங்க-