பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31


"மகா பிரபோ! எனக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும் சட்டியில் கொஞ்சம் வெண்ணெயைப் போட்டு அதை நாவிலிட்டுச் சுவைத்துப் பார்த்து அதன் சூட்டைக் கண்டு பிடிப்பேன்’ என்றாள் இளவரசி சந்திரிகா.

"சரி நெருப்பை மூட்டி, உடனே சமைக்கத் தொடங்கு!” என்று இராட்சதன் கட்டளையிட்டான்.

காந்தாரியும் மங்களநாயகியும் பூரி சுடுவதற்காக மாப்பிசைந்து கொண்டிருந்தார்க்ள். சந்திரிகா இருப்புச் சட்டியைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தாள். அதற்குள் இராட்சதன் நூறு ஆடுகளையும், நூறு பன்றிக் குட்டிகளையும் உரித்துச் சாப்பிட்டு விட்டான். இருந்தும் அவன் பசியடங்காமல், சந்திரிகாவைப் பார்த்து, 'இன்னுமா சட்டி காயவில்லை?” என்று கத்தினான்.

சந்திரிகா ஆயிரம் ராத்தல் வெண்ணெயைச் சட்டியில் போட்டு விட்டு, 'மகாபி ரபோ! வழக்கம்போல் நான் இந்த வெண்ணெயைத் தொட்டு தொட்டு நாவி லிட்டுப் பார்த்தால் சொல்லிவிடுவேன். ஆனால், சட்டி எனக்கு எட்ட வில்லையே! வெண்ணெய் எனக்கு எட்டாத ஆழத்தில் அல்லவா உருகிக் கொண்டிருக்கிறது?’ என்று பதிலளித்தாள்.

'எனக்கு வெண்ணெய் எட்டும்! நானே பார்க்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே நாக்கை நீட்டிக் கொண்டு சட்டியினுள் குனிந்தான் இராட்சதன். அவன் குனிந்த வேகத்தில் ஒரேயடியாக அவன் முகம் சட்டியில் கொதித்துக் கொண்டிருந்த நெய்க்குள் அமுங்கி விட்டபடியால் அப்படியே முகம் வெந்து கருகிச் சாம்பலாகி விட்டான். எதற்காகவோ நிலவறைக்குச் சென்று திரும்பி வந்த இராட்சசி தன் கணவன் முண்டமாய் போனதைக் கண்டு நெஞ்சு உருகி வருத்தப்பட்டாள். ஆனால், மூன்று இளவரசிகளும் சேர்ந்து அவளுக்கு ஆறுதல்