பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38


வழியில் சென்று கொண்டிருந்த காந்தாரியும், மங்களநாயகியும் குதிரைச் சத்தத்தையும் அது ஒடும் போது ஒலித்த மணியோசையையும் கேட்டு, யார் அப்படி வருவது என்று பார்ப்பதற்காகத் திரும்பினார்கள். அது தங்கள் தங்கையாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்!

"பார்த்தாயா? அவள் சந்திரிகாதான்!” என்று வியப்புடன் கூறினாள் காந்தாரி. ஆனால் சந்திரிகா சிரித்துக்கொண்டே குதிரை மீது சென்றாள். பாதையில் ஒரு பள்ளத்தில் கிடந்த சேறு கலந்த நீரைக் குதிரை தன் பின்னங்காலால் பொறாமைக்காரிகள் இருவரின் மீதும் வாரியடித்துவிட்டுப் பறந்து சென்றது.

அவர்களால் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை. தங்கள் தங்கை சந்திரிகாவின் அற்புதமான அலங்காரத்தைப் பற்றியும், அவளுக்கு கிடைத்த கம்பீரமான குதிரையைப் பற்றியும் அவர்கள ஆசசரியப்பட்டுப் பேசிக் போதே சந்திரிகா அரண்மனக்குப்சேர்ந்து விட்டாள்.

அவளயும் அவள் அழகையும் பார்த்தவர்கள் அவள் ஒரு பெரிய நாட்டை ஆளும் பேரரசி என்றே