பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

தங்கப் பசுக்கரிைன் இரகசியத்தை நான் உனக்குத் தெரிவித்து விடுகிறேன். முதலில் ஒரு கோடாரியை எடுத்துக் கொண்டு, இரண்டு குதிரைகளுக்குச் சேணம் பூட்டிக் கொண்டு வா. நாம் இருவரும் புறப்படலாம்" என்றான் அரசன்.

அதன்படியே, கறுப்புச் சட்டைக்காரன், சேணம் பூட்டிய இரு குதிரைகளைக் கொண்டு வந்தான். கையில் ஒரு எடுத்து வந்தான். இருவரும் குதிரை மீது ஏறி வெகு தூரத்தில் இருந்த ஒரு நாணற் காட்டுக்கு வந்தார்கள்.

"கோடாரியை எடுத்துக் கொள். மிக உயர்ந்த நாணலை வெட்டு. ஆனால் நீ வெட்ட முயலும் பேர்து அந்த நாணல் தன்னை காத்துக் கொள்வதற்காக மூன்று முறை உருமாறும். ஆனால் அதற்காகப் ப்யப்படாமலும் கவலைப்படாமலும் நீ வெட்ட வேண்டும். மூன்று முறையில் நீ அந்த் நாணல் மரத்தை இரண்டாக வெட்டத் தவறினால் நீ உடனே இறந்து போய் விடுவாய். ஆகவே, சிறிதும் அஞ்சாமல் உன் பலங்கொண்ட மட்டும் அதை வெட்டித் துண்டாக்க வேண்டும்." என்று கறுப்புச் சட்டைக்காரனிடம் ஏழு தங்கப் பசு மன்னன் கூறினான்.

கறுப்புச் சட்டைக்கார்ன் கோடாரியைக் கையில் எடுத்துக் கொண்டான். மிக உயரமாக நீண்டு வளர்ந்திருந்த நாணல் மரத்தின் அருகில் சென்றான். அதை ஒரு கையால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வெட்டுவதற்காகக் கோடாரியை ஓங்கினான். உடனே அந்த நாண்ல் ஏழுதலை நாகப்பாம்பாக மாறி சிறியது. ஆனால் எவ்வளவு பயங்கரமாயிருந்த போதிலும் கறுப்புச் சட்டைக்காரன் தைரியத்தைக் கைவிடாமல் ஓங்கி ஒரு வெட்டு வெட்டினான். இரண்டாவது முறையாக அவன் கோடாரியை ஓங்கிய போது அந்த, நாணல் மரம் அப்போதுதான் பிறந்த ஒரு பச்சைக குழந்தையின் உருவத்தை வந்தடைந்தது. ஒரு வினாடி நேரம்தான் தயங்கினான் கறுப்புச் சட்டைக்காரன். பிறகு மனத்தைத் தளரவிடாமல் கட்டுப்படுத்திக்-