பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

கொண்டு முன்னிலும் பலமாக ஒரு வெட்டு வெட்டினான். மூன்றாவது முறையாக அவன் கோடாரியை ஓங்கியபோது, நாணல் மரம் இறந்து போன அவன் காதலியாக உருவெடுத்தது. காதலியின் உடலை கண்டவுடன், இவன் கைகள் நடுங்கின. கோடாரி நழுவி க் கிழே விழுந்து விடும் போலிருந்தது. ஆனால் அதற்குள் ஏழு தங்கப் பசு மன்னனின் எச்சரிக்கை ஞாபகத்துக்கு வந்து விட்டபடியால் அவன் இருந்த தைரியத்தையெல்லாம் ஒன்று சேர்த்து மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு பலமாக ஒரு வெட்டு வெட்டினான்.

அந்த உயரமான நாணல் மரத்தின் வெட்டுப்பட்ட பகுதியைக் கையில் எடுத்துக் கொண்டு அவன் அரசனிடம் திரும்பி வந்தான்.

"உன் வேலையை நல்ல முறையில் செய்து விட்டாய். இப்போது, ஒரு புல்லாங்குழல் செய்ய வேண்டிய அளவுக்கு இந்த நாணலை வெட்டு" என்றான் ஏழு தங்கப் பசு மன்னன். அவ்வாறே செய்தபின் அவர்கள் அரண்மனை திரும்பினார்கள்.

அடுத்த ஐந்து மாதங்களும் , அரணமனை வேலைக்காரர்கள் எல்லோரும் தூங்கிய பிறகு இரவு தோறும் அந்தப் புல்லாங்குழலில் ஒ ரு வ ைகயான இராகத்தைப் பாடுவதற்கு கறுப்புச் சட்டைக்காரனைப் பழக்கினான் ஏமு தங்கப் பசு .