பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

படித்துத் தெரிந்தவுடன், அவன் பகவானை நோக்கிப் பிரார்த்தனை செய்தான். அப்படியே ஒரு புத்த சாமியாராக மாறி விட்டான். கறுப்புச் சட்டையை கழற்றிவிட்டுக் காவி யுடையணிந்து கொண்டான். ஐராவதியாற்றின் அடியில் கிடந்த தங்க நாணயங்களை எடுத்து ஒரு புத்த மடம் கட்டினான். அந்த மடத்தில் இருந்து கொண்டு இரவும் பகலும் ஏழு தங்கப் பசு மன்னனின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தான்!



கதை : நான்கு

அசட்டு அரக்கன்

ஆனைமலை அடிவாரத்தில் தோட்டக்காரன் சமயோசிதம் தன் மனைவியுடனும் ஏழு மக்களுடனும் வாழ்ந்து வந்தான். ஏழு மக்களில் மூன்று ஆண் பிள்ளைகள், நான்கு பெண்கள்.

நாள் முழுவதும் தோட்டக்காரன் சமயோசிதம், செடிகளுக்குத் தண்ணிர் பாய்ச்சுவதும், பாத்தி வெட்டுவதும், கன்று நடுவதும், விதை விதைப்பதுமாகப் பாடுபட்டு உழைத்து வந்தான். அவன் மனைவி ஆவுடையாளும் காய்கறிகள் விற்று வந்து அதனால் கிடைக்கும் சிறு ஊதியத்தைக் கொண்டு சமையல் செய்து சாப்பாடு போடுவதும், துணிமணிகள் வாங்கித் தைப்பதும், தன் ஏழு குழந்தைகளையும் வளர்ப்பதுமாக நாள் முழுவதும் உழைத்துக் கொண்டு வந்தாள்.

அந்தத் தோட்டத்தையும், வீட்டில் இருந்த ஒட்டை உடைசலான பழைய சாமான்கள் சிலவற்றையும் தவிர சமயோசிதத்திடம் சில கோழிகளும் ஒரு பசு மாடும்