பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தான் இருந்தன. கோழிகள் இடும் முட்டைகளையும், பசு கறக்கும் பாலையும், அவன் மனைவி ஊருக்குள் கொண்டு போய் விற்று விட்டு வருவாள். இந்தப் பனமெல்லாம் சேர்ந்து அவர்கள் அன்றாடம் கஞ்சி காய்ச்சிக் குடிப்பதற்கே போதுவதில்லை. ஆகவே அவர்கள், மறுநாள் சாப்பாட்டைப் பற்றி நினைக்கக் கூட மாட்டாத நிலையில் இருந்தார்கள்.

மலையுச்சியில் இருந்த கோட்டையில் பெருந்தலைப் பிரசண்டன் என்ற அரக்கன் தன் மனைவியான பெருவாய் பேச்சியுடனும் ஒரு வேலைக்காரனுடனும் வசித்து வந்தான். அந்த மலையும், மலையைச் சுற்றி இருந்த இடங்களும் தனக்குத்தான் சொந்தமானது என்று அந்த அரக்கன் நினைத்துக் கொண்டான். ஆகவே, தோட்டக்காரன் சமயோசிதத்தின் நிலமும் தன்னுடையதென்றே கூறி அதற்கு வாடகையாகப் பணமும் காய்கறிகளும் பெற்று வந்தான். ஆண்டுக்கொரு முறை அவன் வாடகைப் பணம் வாங்க மலையை விட்டுக் கிழே இறங்கி வருவான். அவன் மிகப் பெரியவனாகவும், வலிமை வாய்ந்தவனாகவும், பொல்லாதவனாகவும் இருந்த படியால், அவன் கேட்பதைக் கொடுப்பதைத் தவிர தோட்டக்காரனுக்கு வேறு வழி தெரியவில்லை. தன்னுடைய வரும்படி தனக்கும் தன் மனைவிக்கும் தன் ஏழு குழந்தைகளுக்கும் போதுமானதாக இல்லாவிட்டாலும் கூட எப்படியோ ஆண்டுதோறும் கஷ்டப்பட்டுச் சேர்த்து வைத்து அந்த அரக்கனுக்கு வாடகை கட்டி வந்தான் சமயோசிதம்.

ஆனால், ஒரு வருடம் மழை பொய்த்து விட்டது. கிணறு குளம் எல்லாம் தண்ணீர் வற்றித் துர்ந்து போய்விட்டன. தோட்டத்திற்குத் தூரத்தில் இருந்த ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து ஊற்ற கஷ்டப்பட்டு சமயோசிதம் தண்ணீர் துக்கி வந்த போதிலும் முன்னைப் போல காய்கறிகள் அதிகம் காய்க்கவில்லை. ஏதோ கிடைத்ததைக் கொண்டு அவர்கள் அரைவயிறும் குறை