பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

முடியவில்லை. தனக்கு வந்த கோபத்தில் அவன் தன் தண்டாயுதத்தால் ஓங்கி அந்தப் பசு மாட்டின் மண்டையிலே ஒர் அடி அடித்தான். அந்த ஒரே அடியில் பசு மாடு செத்துக் கீழே விழுந்து விட்டது. பிறகு அவன் தன் கோட்டைக்குத் திரும்பிச் சென்றான்.

அவன் போய்விட்டான், இனித் தைரியமாக வெளி வரலாம் என்று தோன்றியதும், தோட்டக்காரன் சமயோசிதமும், குடும்பத்தினரும், வைக்கோல் போரின் அடியிலிருந்து வெளிப்ப்ட்டார்கள். இருமிக் கொண்டும், தும்மிக் கொண்டும், அரிக்கும் உடலைச் சொரிந்து கொண்டும், தூசியைத் தட்டிக் கொண்டும் அவர்கள் வெளியில் வந்தபோது அதுவரை அமைதியாக இருந்த அந்தத் தோட்டம் திடீரென்று உயிர் பெற்று விட்டது போல் இருந்தது.

முதலில் அவர்கள் தாங்கள் கெட்டிக்காரத்தனமாக நடந்து கொண்டு விட்டதாக எண்ணி மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால், பசுமாடு செத்துக் கிடந்ததைப் பார்த்த பிறகு அவர்கள் மகிழ்ச்சியெல்லாம் துயரமாக மாறிவிட்டது. அந்தப் பசுமாடு அவர்களைப் பலவகையிலும் காப்பாற்றி வந்த தெய்வமாக விளங்கியது. அது செத்துப் போனதை எண்ணித் தோட்டக்காரன் மனைவி ஆவுடையாள் விம்மி விம்மி அழுதாள்.

“கொட்டிப் போன பாலுக்காக கட்டி அழுது கொண்டிருந்தால் என்ன பயனுண்டு? அழுவதை நிறுத்தி விட்டு ஆக வேண்டிய காரியத்தைப் பார்க்கலாம் வா! நான் அந்த மாட்டின் தோலை உரித்தெடுக்கிறேன். அதைச் சந்தையில் கொண்டு போய் விற்றால் ஒன்று அல்லது இரண்டு ரூபாய் கிடைக்கும். அதன் சன்தயை நீ கரியாகச் சன்மத்து வை. இரண்டு நாளைக்காவது சாப்பாட்டுக்கு ஆகும்” என்று சொன்னான் சமயோ சிதம். அவன் சொன்னபடியே செத்துப் போன மாட்டின் தோலை உரித்துக் காயவைத்தான். கறியை வெட்டித் துண்டு