பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

என்று ஒரு யோசனை தோன்றியது. அவனும் அவன் மனைவியும் காதுக்குள் சிறிது நேரம் குசுகுசுவென்று பேசிக் கொண்டார்கள்.

அதன்பின் தோட்டக்காரன் மனைவி நல்ல சேலையொன்றைக் கட்டிக்கொண்டு அரக்கனுடைய மாளிகைக்குச் சென்றாள். சமையற்கட்டுப் பக்கம் இருந்த கதவை அவள் மெதுவாகத் தட்டினாள். அரக்கனுடைய வேலைக்காரன் வந்து கதவைத் திறந்தான். "ஐயா! கொஞ்ச நேரம் உங்கள் வீட்டு மரக்கால் படியைக் கொடுக்கிறாயா? என் கணவர் கொஞ்சம் பொன் கொண்டு வந்திருக்கிறார். அதை அளக்க எங்கள் வீட்டில் படி ஒன்றும் இல்லை” என்றாள் தோட்டக்காரன் மனைவி ஆவுடையாள்.

வேலைக்காரன் அவளை வியப்போடு நோக்கினான். "பொன் அளக்கப் படி வேண்டுமா?" என்று நம்பிக்கையில்லாத குரலில் கேட்டான். பேச்சுக்குரலைக் கேட்டுவிட்டு அரக்கன் மனைவியான பெருவாய் பேச்சி அங்கே வந்தாள்.

தோட்டக்காரன் மனைவியைப் பார்த்தவுடன் அந்த அரக்கி, "உனக்கென்னடி தைரியம்? இந்த வருடம் கொடுக்க வேண்டிய வாடகைப் பணத்தை உன் கணவன் இன்னும் கொடுக்கவில்லை. நீ எப்படி இங்கே இவ்வளவு துணிச்சலாக வந்து விட்டாய்? போ! போ” என்று விரட்டினாள்.

உடனே தோட்டக்காரன் மனைவி ஆவுடையாள் மிகவும் மரியாதையாக, அந்த அரக்கியின் முன் தலைவணங்கி, "அம்மா பெருவாய் பேச்சி! இனிமேல் பாக்கி வைக்கமாட்டோம். என் கணவருக்கு இப்போது கொஞ்சம் அதிர்ஷ்டம் வந்துவிட்டது. அவர் நிறையத் தங்கம் கொண்டு வந்திருக்கிறார். அவ்வளவு தங்கம் நீங்கள் கூட இதுவரை பார்த்திருக்கமாட்டீர்கள். அதை அளப்பதற்குப் படி வாங்குவதற்காகத் தான்