பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

பசுக்களையெல்லாம் கொல்லும்படிச் செய்தாய். இப்போது என் கண்முன்னாலேயே உன் மனைவியைக் கொலை செய்து விட்டாய். மறுபடியும் நீ இந்தப் பாதகச் செயல்களைச் செய்யாமல் இருக்க உன்னைத் துரக்கு மரத்தில் தான் கட்டித் தொங்கவிட வேண்டும்" என்று அரக்கன் கூவிக் கொண்டே வீட்டின் உள்ளே வந்தான்.

அப்போதுதான் அரக்கன் வந்ததைக் கவனித்தது போல, சமயோசிதம், "ஐயா, அரக்கரே, வாருங்கள்! வணக்கம்! என் மனைவியைப் பற்றி நீங்கள் கவலைப்படவே வேண்டாம். ஏனென்றால் இது அடிக்கடி நடக்கக் கூடிய காரியம்தான். நான் கொஞ்சம் முன் கோபக்காரன் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே! கோபத்தில் இப்படித் தான் அவளை நான் கத்தியால் குத்தி விடுவேன். ஆனால், அவளுக்கு அதனால் ஒன்றும் கெடுதல் இல்லை. ஏனென்றால் என்னிடம் இருக்கும் இந்த மாயத்துருத்தி மிகவும் உபயோகமாயிருக்கிறது” என்று சொல்லி அடுப்படியில் இருந்த துருத்தியை எடுத்துவந்தான். அதைத் தன் மனைவியின் மூக்குத் துவாரத்தில் வைத்து மெல்ல மெல்ல ஊதினான். சிறிது நேரத்திற்குப்பின் மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள் மனைவி . அவள் அப்போதுதான் அரக்கனைக் கண்டது போல, "ஐயா, இப்படிப் பட்ட நேரத்திலா நீங்கள் இங்கு வரவேண்டும்? எங்களுக்குள் சண்டை நேர்ந்து இவர் என்னைக் கொல்லும் சமயத்திலா நீங்கள் வந்து சேர வேண்டும்? இப்படிப்பட்ட கண்ணராவிக் காட்சியையா நீங்கள் பார்க்க வேண்டும்?” என்று கேட்டாள்.

அரக்கன் அவளுடைய அங்கலாய்ப்பை யெல்லாம் சிறிதும் கவனிக்கவில்லை. அவன் பார்வை முழுவதும் தோட்டக்காரன் கையிலிருந்த துருத்தியின் மீதே பதிந்திருந்தது. "அந்தத் துருத்தி எனக்குப் பயன்படக்-