பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

உத்தரவிட்டான். "எனக்குத் தாகமாக இருக்கிறது. நான் கொஞ்சம் கள்ளுக் குடித்து விட்டு வரவேண்டும். இன்று இந்தப் புரட்டுக்காரனைத் தீர்த்துக் கட்டப் போகிறோம். ஆகையால், உனக்கும் ஒரு மொந்தை கள் வாங்கித் தருகிறேன் வா" என்று அழைத்தான் அரக்கன்.

வேலைக்காரன் இதைக் கேட்டு பெருங்களிப்பு கொண்டு அரக்கன் பின்னாலேயே கள்ளுக் கடைக்குள் நுழைந்தான். கள்ளுக்கடை வாசலில் கட்டியிருந்த சாக்குக்குள்ளே சமயோசிதம் மட்டும் தனியாக இருந்தான்.

அவன் தன் மூச்சையெல்லாம் அடக்கி முண்டி முண்டிப் பார்த்தும் ஒன்றும் பலனில்லாமல் போய்விட்டது. ஏனென்றால் சாக்கு பலமாக கட்டப்பட்டிருந்தது. சமயோசிதம் தன் நம்பிக்கையை இழந்து விட்ட சமயத்தில் சாலையில் கழுதைகள் நடக்கின்ற சப்தம் கேட்டது. உண்மையில் பன்னிரண்டு கழுதைகளின் மேல் வியாபாரத்திற்குள்ள சரக்குகளை ஏற்றிக் கொண்டு அப்போது அந்த வழியாக ஒரு வியாபாரி சென்று கொண்டிருந்தான்.

"நண்பனே, என்னை அவிழ்த்து விடு; நல்ல நண்பனே! என்னை அவிழ்த்து விடு' என்று கூவினான் சமயோசிதம்!

வியாபாரி தன் கழுதைகளை நிறுத்திவிட்டு சாக்கு மூட்டையின் அருகே வந்து, "நான் எதற்காக உன்னை அவிழ்த்து விட வேண்டும்?” என்று கேட்டான்.

"எனக்குத் துன்பம் ஏற்பட்டிருக்கிறது. அதற்காகத்தான் உன் துணையை நாடுகிறேன். தயவுசெய்து என்னை அவிழ்த்து விடு” என்றான் சமயோசிதம்.