பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77



சமயோசிதம் கழுதைகளை ஒட்டிக் கொண்டு சந்தைக்கு வந்தான். வசதியான ஒர் இடத்தைத் தேர்ந்து அந்த இடத்திலே கழுதைகளின் மேலிருந்த வியாபாரச் சரக்குகளைப் பரப்பி வைத்தான். அவையனைத்தும் வண்ணக் கண்ணாடித் துண்டுகள் இழைத்து வெள்ளியினால் செய்த மோதிரங்களும், மேகலைகளும், தலைச் சிட்டிகளும், வளையல்களும், பொத்தான்களுமாயிருந்தன. எல்லாம் நல்ல விலைக்குப் போயின. அவன் இவ்வாறு வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, அவனுக்கு நன்றாகப் பழக்கப்பட்ட அரக்கனுடைய குரல் அவன் காதிலே பட்டது. அவன் பீதியோடு தலை நிமிர்ந்து பார்த்தான்.

அரக்கனும், அவனுடைய வேலைக்காரனும் எக்களிப்போடு, ஒருவரோடொருவர் கைகோர்த்துக் கொண்டு சந்தையினுள்டே நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் குடிவெறியில் ஆடி ஆடி அசைந்தசைந்து நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அரக்கன் தான் மிகவும் குடித்திருந்தான். அவன் தள்ளாடி விழப் போகும் போதெல்லாம் வேலைக்காரன் அவனைத் தாங்கிப் பிடித்து நிறுத்தினான். அரக்கன் எக்களிப்போடு பாடிக் கொண்டிருந்தான். இவ்வளவு ஆனந்தமான நிலையில் சமயோசிதம் அவனைப் பார்த்ததேயில்லை. அவன் கண்ணில் படாமல் தப்பிப்பதற்காகச் சமயோசிதம் ஒளிந்துக் கொள்ளக் கூடிய இடம் எங்காவது இருக்கிறதா என்று திரும்பித் திரும்பிப் பார்த்தான். ஆனால், அவன் தகுந்த இடத்தைக் கண்டு பிடிப்பதற்குள் அரக்கன் அவன் கடை எதிரே வந்து, வியப்போடு வாயைப் பிளந்து கொண்டு நின்றான்.

நடுங்கிக் கொண்டிருந்த சமயோசிதத்தின் பக்கம் அரக்கன் பிரசண்டன் தன் கையை நீட்டி, "தோட்டக்காரா! ஆற்றின் அடியில் இருக்க வேண்டிய நீ இங்கே எப்படி வந்தாய்? நான் தானே சற்று முன்