பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

இளவரசியும் தான் பிறந்தார்கள். ஆனால், அவர்களைப் பெற்ற பொல்லாதவள் அப்பச்சைக் குழந்தைகள் இரண்டையும் ஒரு கூடையில் வைத்துக் கடலிலே விட்டெறிந்து விட்டுவரச் சொல்லிவிட்டாள்” என்று மிகவும் துயரப்படுபவள் போலச் சொன்னாள் சிற்றன்னை பானுமதி.

அதைக் கேட்டு ராஜா தேவப்பிரியன் மிகவும் கலக்கமடைந்து, "என் மனைவி எங்கள் குழந்தைகளைக் கொலை செய்து விட்டாள். நான் மறுபடியும் அவள் முகத்தில் விழிக்கப் போவதில்லை” என்று வெறுப்போடு கூறினான். பிறகு அவன் தன் மனைவி கோமளாவை ஒர் அறையில் போட்டுப் பூட்டி வைக்கச் சொன்னான். என்ன இருந்தாலும் அவளைக் கொல்ல மனம் வராததனால் தான் அவன் அப்படிச் செய்தான். "அவள் பேச்சை மறுபடி என்னிடம் பேச வேண்டாம்!" என்று தன் சிற்றன்னையிடம் முழங்கினான்.

சிற்றன்னை பானுமதி தானடைந்த வெற்றியை நினைத்துச் சிரித்துக் கொண்டாள். மறுபடியும் அரண்மனைப் பொறுப்பை யெல்லாம் ஏற்று நடத்துகின்ற தலைவியாகவும் நாட்டிலே மிக உயர்ந்த நிலையில் உள்ள ராஜமாதாவாகவும் உயர்ந்து விட்டாள்.

கடலில் எறியப்பட்ட சிறு குழந்தைகளான இளவரசனும், இளவரசியும் மூழ்கி விடவில்லை. அவர்கள் இருந்த கூடை கடல்லைகளின் மீது மிதந்து மிதந்து கரையோரமாகவே வெகுதூரம் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு செம்படவக் கிழவனின் கண்ணில் பட்டது.

அவன் அக்குழந்தைகளைத் தன் வீட்டிற்குத் தூக்கிக் கொண்டு போனான். அவன் தன் மனைவியை நோக்கி, "அடியே! இவ்வளவு நாளும் ஆண்டவன் நமக்கு ஒரு குழந்தையைக் கூடத்தரவில்லை. ஆனால் இப்போது நம் வயது முதிர்ந்த காலத்தில் இரட்டைக் குழந்தைகளை