பக்கம்:நூறாசிரியம்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

79


வையசம் :சகடம்-வண்டி-உருளை-உருளை போல் உருள்வதால் உலகம்.

இவ்வுலக உயிர்கள் உய்தல் வேண்டிச் செய்யப் பெறும் மெய்யறிவு வேளாண்மை என்று குறிக்கப் பெற்றதென்க.

அயர்வின்றி -அயர்ச்சி யின்றி.

மெய்யின் வினைபுகு உணர்வேம் : மெய்ம்மையின் வேளாண்மையைச் செய்யப் புகுந்த உள்ளுணர்வுடையேம். நிலத்துக்கண் பயிரும், புலத்துக்கண் அறிவும் விளைவிக்கும் முயற்சியே மாந்த உயிர்களுக்கிட்ட வாழ்வு நோக்கமாம் என்றும், அந் நோக்கம் நடைபெறத் துணைபுரிவதே மெய்யறிவினார்க்கிட்ட இறைக் கட்டளையாம் என்பதும் உணர்த்தப் பெற்றன.

செய்யன் முற்றும் நின் அளி அன்றே! - மெய்யுணர்வுடையார் செய்யும் முயற்சியும் அம்முயற்சியின் பயனும் நின் ஊக்கமும், விளைவுமே யாகுமன்றி அவர்தம் விளைவன்று என்பது கூறப்பெற்றது. கருவிகளும் அக் கருவிகளுக்கமைந்த கரணியங்களும் அக்கருவி, கரணியம் இரண்டாலும் விளைந்த கருமங்களும் அக் கருமங்களின் பயனும் அவற்றிற்கு உரிமை நல்கியவர்க்கே ஆகுமன்றி அவ்வினைப்பாடுகளுக்கு உறுப்பாக அமைந்தார்க்கு என்றும் ஆகா என்னும் உண்மை ஈண்டு விளக்கப் பெற்ற தென்க.

பயன் கருதாத உயிர்த் தொண்டே அறிவின் பயனாம் என்பதும் அவ்வறிவு விளைவுக்குக் கல்வி முதலிய முயற்சிகளில் ஈடுபடுவதே என்றும் செயத் தக்கதென்பதும் உரைக்கப் பெற்றன.

இப்பாட்டு புறத்தினையும் பொருண்மொழிக் காஞ்சியென் துறையுமாகும்.