பக்கம்:நூறாசிரியம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


“நூறாசிரியம்” - என்னும் தலைப்பிட்டுத் தென்மொழியில் அடுத்துத் தொடங்கியபோது-அப் பா வெளியீட்டு முன்னுரையில்-"புரையும் கறையும் நிறைந்த போலி இலக்கியப் படைப்பு மிகுந்த இக்காலத்து நிறையும் விரையும் கலந்த இத்தகைய நூற்கள் வாழ்க்கைக்கு ஒளியும் வழியும் கூட்டுவன என்பதைப் படிப்பார் தெள்ளிதின் உணர்வர்!" என்றவாறு ஐயா அவர்கள் குறிப்பொன்றும் சுட்டியுள்ளார். ஆற்றல் சான்ற காலத்தால் கரைந்து போகாத வல்லிய மெய்யிலக்கியமாக இதனை வெளிப்படுத்திஅதன்வழி வாழ்க்கைத் தெளிவை உண்டாக்கும் பயனை விளைவிக்க வேண்டும் என்ற கருத்துரு அவர் நெஞ்சில் முகிழ்த்து நின்ற காட்சியே-இம் மேற்குறிப்புரையிடையே மேம்பட்டுத் தோன்றுகிறது. சிறந்த இலக்கியமாக இதனை நிலைநிறுத்தவேண்டும் என்பது நம் பாவலரேற்றின் பாரிய அவா! இந்நூல் அத்தகைமையைப் பற்றி இலங்குகின்றது! நீடி நிற்பதற்குரிய பன்னூறு சிறப்புக் கூறுகள் இதனுள் பதிவெய்தியுள்ளன!

தொடக்கத்தில் நம்பா மதத்தவராகவிருந்து-பின்னர், ஓரிறை நம்பிக்கையாளராக நிலை நின்றவர்-நம் பாவலரேறு அவர்கள்! தமிழென்னும் செம்மொழியில் ஆழ அடியூன்றி ஆரமாந்தி ஆர்ந்த தெளிவேந்தி ஆய்ந்து தேர்ந்த புலந்தோய்ந்து பொலிந்து ஒளிர்ந்தவர் இவர்!

தமிழ்க்கும் இவர்க்கும் எவ்வகையில் தொடர்பு என்று. இவரே ஒரு பாட்டில் விளக்குகையில் - தமிழ்தான் என் உயிர்மலர்ச்சி - உடலம்உள்ளுணர்வு-உலகம்-கருத்தெழுச்சி-பார்வை-செவியோசை-பிறவி. முழுமுதல்தாய்-தந்தை குரு-கல்வி காட்சி - உயிர்த்துணைவி-குடும்பம்உயிரின்பம்-குழவி உறவுரிமை-சுற்றம் உயர்வாழ்க்கை-தொண்டு. எழுத்துறவு - பேச்சு-அறிவியக்கம்-மூச்சு-உயிர்நட்பு-விருந்து-வினையாடல்-நனவுதிருமறைநூல்-கனவு-மதமெய்மம்-இறைவன்-யாவும் என்று அடுக்கமாக முழக்கமிடுகையிலேயே அவ் வெளிப்பாட்டின் உச்சி முகட்டில் “தமிழே எனக்கு இறைவன்!" என்று தலைப்பிட்டுள்ள காட்சியில் இவரின் முழு வாழ்க்கைநோக்கமும் போக்கும் கூட நன்கு பதிவுற்றுள்ளமையை உணரலாகும்.

தமிழையும் தம் வாழ்வையும் வேறு வேறாகக் கருதவேயியலாதவாறாக அவ்வளவு ஒன்றிப் பிணைந்த கொள்கை வாழ்க்கையர் என்பதனைத்

தோளுக் கென்றும் தோய்வில்லை என்
தொண்டுக் கென்றும் நைவில்லை!
வாளுக் கென்றும் பழுதில்லை - என்
வாழ்வும் தமிழும் ஒன்றன்றோ?!...

(கனிச்சாறு தொகுதி : 3 பா: 130)

என்று வியங்கொள்ளுமாறு கேள்விவழி இவரே விடைய கர்ந்துள்ள நிலையிலும் தெளிவாகக் காணலாம். தம் உள்ளத்தையே "தமிழ்கமழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/11&oldid=1210062" இலிருந்து மீள்விக்கப்பட்டது