பாவலரேறு பெருஞ்சித்திரனார்
87
மண் பனிப்ப: நிலம் குளிர்மை யெய்த
மோத்தை தழைபரப்பி உழைவருந்திப் புறங்கவிழ பெண் ஆடு குட்டி ஈனுவதற்கென, ஆண் ஆடு இலை தழைகளைக் கொணர்ந்து நிலத்தே பரப்பி, ஒரு புறத்தே இருந்து வருந்தி முகங்கவிழ்ந்து நின்றதாம் என்க.
பெண் ஆடு கருவுயிர்த்தலைத் தான் காணக் கூடாதென ஆண் சிறிது தொலைவில் நின்று தலை கவிழ்ந்து கொண்டது. பெண் கருவுயிர்க்குங் கால் படுந்துயர் ஆணுக்குந் துயரை வருவித்தது.அது தன் பிணையின் மேல் வைத்த அன்பால் என்க. மோத்தை ஆண் ஆடு,
கடமை : பெண் ஆடு,
மறி- குட்டி
ஈனல் - கருவுயிர்த்தல்,
ஊத்தை : கருவுயிர்ப்பு நீர் குட்டியைப் போர்த்துள்ள வழவழப்பான கரு நீர்.
ஊத்தை நாக்கொடு நக்கி உளமுறி: குட்டிகளின் மேலுள்ள கருவுயிர்ப்பு நீரைத் தன் நாவைக் கொண்டு நக்கித் தூய்மை செய்தது பெண். அவ்வாறு செய்யச் செய்ய அதன் உள்ளத்தே தாய்மை உணர்வு ஊறி நின்றது என்க.
உண்ணிய வம்மின் - உணர்த்த ஊத்தையைத் துய்மை செய்த பெண் ஆடு குட்டிகளைத் தன்னிடம் வந்து பாலருந்துமாறு தன் உள்ளத்தின் விழைவு தோன்ற விளித்தது என்க.
தாய் தம்மைப் பாலுண்ண அழைத்ததும் குட்டிகள் உள்ளம் உவந்து ஒடின என்றவாறு.
முன்னிளங்காலுறப்பின்கால் எவ்வி: முன்னங் கால்கள் நிலத்தே உறும்படி வைத்துப் பின் கால்களால் உந்தி எக்குதல் செய்து,
முட்ட: முட்டுதல் செய்ய, குட்டிகள் தாயிடம் பால் அருந்துங்கால் தம் இளந்தலையால் மடியை முட்டி முட்டி முலைத் தசையுள்.பால் மிகுந்து சுரக்கும்படி செய்வது இயற்கை
முட்டச்சுரக்கும் முகிழ் முலைக்கு : குட்டிகளின் இளந்தலை முட்டுதல் செய்தலால் சுரக்கின்ற முகிழ்த்து நிற்கும் முலையினுக்கு.
என் கட்டிக் கிடக்கும் கவின்முலை தாழ்ந்தே: வறிதே கட்டப்பட்டுக் கிடக்கின்ற அழகு பொருந்திய என் முலைகள் தாழ்ந்தனவாக
ஆட்டின் முலை பால் சுரந்து, கூம்பித் தோன்றுவதால் முகிழ் முலை எனலாயிற்று. அவ்வாறு குழவி வாய் வைத்தலும் அதனால் முலை சுரக்கப்