பக்கம்:நூறாசிரியம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

91

கொள்ளும் கொடி போலன்றித் தன்னுடல், இழுத்துக் கட்டப்பெற்ற கயிறு போல் கட்டுப்பட்டுக் கிடப்பதும், அதுபோல் கட்டுப்பெறாத தன் உயிர் தன் தலைவனைப் பற்றுக்கோடாகக் கொண்டு காதல் ஆட்டு நிகழ்த்துவதும் உவமையால் உணர்த்தப் பெற்றன என்க.

ஊன்றுகோலன்: ஊன்று கோலாகி நிற்கும் காதலன், உயிர்க்கு ஊன்று கோல் போன்றவன்.

தொம்பர்.தொம்பக் கூத்து ஆடுவார்.

தொம்பம்: கழைக்கூத்து வகையினொன்று. கழைக் கூத்து கம்பக் கூத்து என்றும் வழங்கும். மேனாட்டினர் இக் கால் ஆடும் BAR ஆட்டமும் கழையாட்ட வகையினொன்றே. கழையைக் கிடையாகவும் நட்டும் வைத்து அதன் மேல் நின்றாடும் ஆட்டம். கழைக்கு மாறகக் கயிறும் கட்டப் பெற்று ஆடுதலும் உண்டு.

இது குறிஞ்சியென் திணையும், தோழிக்குத் தலைவி அறத்தொடு நிற்றல் என் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/117&oldid=1221565" இலிருந்து மீள்விக்கப்பட்டது