பக்கம்:நூறாசிரியம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



உள்ளம்” என்றவாறு குறிப்பிட்டுப் (பா:9வரி:9) பீடும் பெருமையும் கொள்ளும் பேருள்ளத்தவராகிய இவரிடம் ஈடிணையில்லாத "தன்னம்பிக்கை" என்னும் செழுஞ்செம்மார்ப்புவீறு ஓர் இயற்கைப் படிவுபோல் இயல்பாய் இழைந்திருந்ததை அணுக்கமாகத் தோய்ந்திருந்த அனைவரும் அறிகுவர்!.

தம் பாட்டில் - அதன் சூட்டில் - அது தரும் பயனில் - விளைவில் - சுவையில் - நிரம்பிய நன்னம்பிக்கை இவர்க்கு மிக்கிருந்தமையை - இவரே ஓரிடத்தில் வீறொடு கூறிய,

“திக்குழம் புருக்கித் தெறிக்கும் எரிமலைப்

பாக்குழம் பினையொரு பழம்பர்ய் தடுக்குமே?”'(கனிச்சாறு 159)


என்னும் நெருப்புத் தெறிப்பு வரிகளினூடே தெளியலாம்.

யாம் எடுத்துக் கொண்ட கொள்கை எப்படிப் பரவவேண்டும் என்று விரும்புகின்றேன் தெரியுமா?!..கேளுங்கள் என்கிறார், ஒரு பாட்டினிடையே!...

“....எங்கோள்
பொறியாய் எளியாய்க் கலையாய் அனலாய்
குறிப்பெறச் சிதறுகள் புயலுருக் கொள்க!

பொய்மையும் கயமையும் பெனடிப்பொடி யாகுக”
(கனிச்சாறு : 1.125)

1959-இல் தென்மொழியிதழைத் தொடங்கியதிலிருந்து 1995குன் திங்கள் 11ஆம் நாள் காலை வரையிலான முப்பத்தாறாண்டுகள்(36) கால இடைவெளியில் நிலைகுலையாத கொள்கைச் செயற்பாட்டாளராகவும், -தமிழ்மொழி-தமிழினம்-தமிழ்நாட்டுப்போராட்டக்காரராகவும் மாறாட்டமில்லாத மாட்சிமையுடன் வாழ்ந்தியங்கிய இவ்வயப்புலியாகிய நம் ஐயாவின் வாழ்க்கை - ஒரு சான்று வாழ்க்கையாகும்!

இவரின் கொள்கை வல்லுறுதி சான்ற வாழ்க்கையிடையே வெளிப்படுத்திய பன்னூறு பாக்களில் -இவ்வயிரவுறுதி நோக்கின் போக்குகளைக் காணலாம்.

அதிலொன்று இது!

வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்!
வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்ப்பொருட்டே ஆவேன்!
தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ்மேல்தான் வீழ்வேன்!
தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்!
சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்!

சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிரு கூறாய்ப்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/12&oldid=1210069" இலிருந்து மீள்விக்கப்பட்டது