பக்கம்:நூறாசிரியம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

95


காட்சி கவ்வுதல்: காணுவதற்கான அவா வுணர்வு.

“அன்று நீ காட்சிக் கங்காந்தனை இன்று நீ காட்சியின்றிக் குன்றினை"- என்றவாறு.

கைதொடத் தந்து: அவன் அன்று தொடுகையில் நீ நாணிப் பின்வாங்காது நாணுதலின்றி அவன் தொடுதலை நீயும் விரும்பினை இன்று உன்னைத் தீண்டுவாறுமின்றி இழித்துப் புறந் தள்ளப்பட்டாய் அன்று நாணமிழந்தனை இன்று நாண முற்றனை என்றவாறு.

மீட்சியின்றி: மீட்டுக்கொள்ள லின்றி.

அணைய வடங்கி:' அனைத்தற்கு அடங்கி யுடன்பட்டு.

வரையா ஒருவன்: மணத்தால் உரிமையாக்கப்படாத ஒருவன்.

வரைதல்: அளவுப் படல்- எல்லை யிடல் -உறுதி யிடல். ஆடவரும் பெண்டிரும் வரைதுறையின்றி விலங்கும் பறவையும்போற் கலத்தல் ஆறறிவு சான்ற மாந்தர்க்கு விலக்கப்பட்டதோர் ஒழுக்கமாகலின் அவர் ஈடுபாட்டிற்கு எல்லை வகுக்கப்பட்டது. இவனை இவளும். இவளை இவனும் என்று அளவுரைக்கப் பெறுவதே-எல்லை கட்டுவதே-உறுதிப்படுத்துவதே வரைதல் எனப்படும். வரைதல்-மணத்தல்.

வயவு: காதல் நோய்.

நானம் உகுத்தல்: பெண்டிர்க் கியல்பாகிய நாணம்.

'உயிரினும் சிறந்தன்று நானே’ என்றுரைக்கப்பட்டது.

இளமுகை: எழுச்சியுறும் அரும்பு.

துவர் சிவப்பு: சிவந்த பவழம்.

குறங்கு தொடை: உடல் பிளவுறும் பகுதி யாதலின் குறங்கெனப் பெயரியது, கவைத் தொடக்கம்.

தடங்குறங்கு: பெரிய தொடை

ஏமுற்று: மயக்குதலுற்று.

பயிர்ப்பு: பெண்களுக்கியல்பாகிய ஓர் அருவருப்பான கூசுதல் உணர்வு.

அறவொடுங்கிய: முழுதும் இலை யெனும்படி ஒடுங்குதலுற்ற.

மணவாத ஒருவன் தன் உறுப்புகளைப் புகழ்ந்துரைக்கையில் கூசுதலின்றி அருவருவப்படையாது அன்று கேட்டுக் கொண்டிருந்தனை! இன்று நீ உலகின் முன் கூசுதலை யுடையையாய் அருவருப்படையப் பெற்றனை.

என்றிவை வழி: என்றிந் நான்கு வழியிலும்.

அவன் பால் செல்லுமுன் பழிசேருவதுபற்றிய அச்சத்தையும் இளமைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/121&oldid=1187420" இலிருந்து மீள்விக்கப்பட்டது