பக்கம்:நூறாசிரியம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கக



போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே!
புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லாம் அதுவே:

(தென்மொழி: 1975)


1956-இன் தொடக்கத்தில் ஐயாவின் முதல்நூலாகிய “கொய்யாக்கனி’ வெளிவந்தது. அந்நூலுக்குரிய மதிப்புப் பாமாலையில் 23 அகவையே வாய்ந்திருந்த இளையராக முன்னின்ற நம் பாவலரேறு ஐயா அவர்களைக்"குள்ளம் எப்படி; அப்படியிலாப் பெருங்கொள்கையுடையார் குறைகடல் எப்படி அப்படிக் குணநிறை துரை-மாணிக்கனார்'என்றவாறு பாவேந்தரே வாழ்த்திப் போற்றியிருப்பதிலிருந்து நம் ஐயாவின் நீடிய கொள்கைத் தொடர் நடக்கை வெள்ளிடை மலையாய் விளங்கித் தோன்றி யொளிர் கின்றமையை விளங்கிக் கொள்ளலாகும்!

ஆற்றொழுக்கு - அரிமா நோக்கம் - தவளைப் பாய்த்து - அன்ன முத்தகைத் திறஞ்சான்ற நூற்பாக்களையும் விஞ்சுகின்ற அளவில் - நுண்மாண்துழைபுலங் கொண்டு உத்திகளோடு இவர் வித்தியுள்ள பன்னூறு பாவித்துக்கள், நிகழ்கால - எதிர்காலத் தமிழினம் மலர்ச்சியும் புலர்ச்சியும் மீட்சியும் ஆட்சியும் கொள்ளுதற்கென உட்கொள்ளுவதற்குரிய நல்விளைவுகளை ஆக்கவல்லன.

பாடு பொருளுக்கேற்ப யாப்பு வகையைத் தெரிந்தெடுத்துக் கொள்ளுவதிலும் - கருத்தாழம் நிரம்பிய தேர்ந்த சொற்களை உரிய இடத்திலிட்டு ஒளிரச் செய்வதிலும் படித்தவுடன் அறிவுத்தெளிவும் புலப்பொலிவும் கொள்ளுகின்றபடியான உத்திகளைக் கையாளுவதிலும் பாவலரேறு அவர்கள் வல்லிய திறப்பெருமகனார் ஆவார். எண்பொருள வாகச்செலச் சொல்லும் இந்நுண்ணுட்பத் திறப்பயிற்சியில் கரை கண்டவர் என்பதைத் தமிழ்ச்சிட்டு இதழில் குழந்தைகளுக்கும் சிறுவர் சிறுமியர்க்கும் -பிறவற்றில் இளந்தையர்க்கும்- கற்றவர்க்கும் ஆய்வு முற்றியர்க்கும் - புலவர்க்குமாகப் பலபடிநிலைத் தகைமைகளில் யாத்துப் புறம் விடுத்துள்ள ஆக்கங்களால் அறியலாகும். அனைத்து ஆக்கங்களும் வெளிப்பாடுகளாக அமைந்திருக்குமேயல்லாமல் - வெளிப்படுத்தங்களாக அமைந்திரா இயல் பான சீரொழுங்கோட்டம் - அது அதற்குமுரிய பாங்கில் அமைந்தோடும்!

அகவலிசை இசைந்த ஆசிரியப் பாவகையை இந்நூலுக்கான இவர் கருதித் தேர்ந்தெடுத்தமைக்குரிய முதற்காரணம் துண்மையும் நொசிவும் துணங்கும்படத் திண்ணிதாகவும் தெள்ளிதாகவும் உரிய கருத்தகலத்திற்குத் தகத் தடங்கலற்ற முறையில் இதில் யாத்தளிக்க வியலும் என்னும் வசதிப்பாடே!

கருத்தாழம் நிரம்பிய இயற்கை வேர்ப்பொருள் செறிந்த நுண்ணிய பழந்திறஞ்சான்ற வளச் சொற்களை இவ்வகை யாப்பில் எளிதே இயைத்து நிலைநிறுத்திப் பயன் கொழிக்கச் செய்யலாம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/13&oldid=1210035" இலிருந்து மீள்விக்கப்பட்டது