பாவலரேறு பெருஞ்சித்திரனார்
113
முரசுகடிப் புண்ட அரசரு மல்லர்;
உரைசெல் லாட்சியின் அவரி னோங்கியர்.
கோன்முறை திறம்பிக் குடிநிலை திரிமுன்
ஆன்றுரை கொளுவும் அமைச்சும் அல்லர்:
நவைதீர் அவையின் நலங்கூர் நாவினர்.
5
நுரைப்பஞ்சின் நரைதாங்கி
அரியேற்றின் அணலடர்ந்து
நெறியாற்றின் நெஞ்சுபடரப்,
பாடியுஞ் சேரியும் பட்டினப் பாக்கமும்
ஊருங் குடியும் ஒதை நகரமும்,
10
வெய்யினும் மழையினும் விதிர்க்கும் பனியினும்
பொய்யினும் புரையினும் பூட்கை தளராது,
காலையும் மாலையும் கடும்பகல் யாமமும்,
வைகலும் நாடி மெய்கலந்து புனைவின்றிக்
கொல்வரியின் சொல்பாய்ச்சித்
15
தொல்குடிமை கட்டழித்த
ஆரியத்தை அடிதுமித்துப்
பட்டமும் பதவியும் பரவலும் நாடாது,
பழமை கடிந்து பாழ்மை புலங்காட்டி,
மருளும் இருளும் மறுமையும் போக்கி,
20
நிகழ்நலம் ஒன்றே நிறைத்தெனக் காட்டிக்
குலக்கோ டரிந்து சமயக்கா லறத்துணித்துக்
கலக்குறு கொள்கைக் கடவுண் மறுத்தே
யாரும் யாவும் யாண்டுந் துய்மெனப்
புதுமை பொழிவித்துப் பொதுமை தழைவிக்கும்
25
அரிய ராகலி னவரே
பெரியா ரென்னும் பெயரி யோரே!
பொழிப்பு:
குறுந்தடியால் அடிக்கப்பெற்ற முரசை உடைய அரசருள் ஒருவரும்