பக்கம்:நூறாசிரியம்.pdf/163

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

137


என்றும் கூறினாள் என்க.

பெண்மை நலனுக்குக் கொழுவிய துங்கும், பரத்தைக்கு அஃது உறிஞ்சியெடுக்கப் பெற்ற வெற்றுப் பனங்காயும், அவளொடு தொடர்பு கொள்ளுதல் முத்தொளைகளை உடையதும், பனங்காயைப் போன்றதும்ஆகிய ஒரு மண்டையோட்டோடு தொடர்பு கொள்ளுதல் போல்வதே என்பதும், அந்நிலையில் அவள் பார்வைக்கும் பேச்சுக்கும் பொருளில்லை என்பதும் குறிப்பால் உணரத்தக்கன.

நீ நின் செவித்துளை தாழக் குழை வாங்கி - நீ, நின் செவித் துளைகள் தாழும்படி அதில் இட்ட குழைகளைக் கழற்றி நீக்கி.

செவியில் அணியப் பெற்றிருக்கும் ஒருவகை அணியாகிய குழைகளை நீக்குதலால் அதன் துளைகள் தாழ்ந்திருக்கின்றன.

இனி, தன்னைப் பிரிந்த பரத்திமையொழுக்கம் மேற்கொண்ட கணவனைப் பற்றிப் பிறர் தூற்றும் உரைகளை வணங்கிக் கேட்டுக் கொண்டாள் எனற்குச் 'செவித்துளை தாழ’ என்றும் அதற்குத் தடையாக உள்ள குழைகளை நீக்கினாள் எனவே 'குழை வாங்கி' எனவும் பொருள் கொள்ளலாம்.

நெய்சுவறிக் குழல்பறம்ப - இட்ட நெய் காய்ந்து போய், இடா நெய்யால் கூந்தல் பறந்து சிதர்ந்தது.

மெய் பசந்து களையிழப்பு - கணவற் பிரிவாலும் துயராலும் மேனி பசந்து களை யிழந்தது.

உகுநீர் விழியோடு உள்ளங் கவலுதல் - எப்பொழுதும் உருக்கின்ற நீர் சுரக்கும் விழியினளாகி உள்ளத்தே அழுங்குதல்.

புறத்தே அழுங்குதல் போலிமை ஆகலின் உள்ளத்தே அழுங்கினாள் என்றதும், அவ்வழுங்கலை உகுநீர் விழி உறுதிப்படுத்தியது என்றதும் கவனிக்க

தகுவதில் அம்ம! - தக்கத்தில்லை அம்ம!

‘கணவன் வேறு வகையில் பிரிவுற்றான் எனின் நீ வருந்துதல் தக்கதாகும். அவன் தீயொழுக்கத்தால் பிரிந்திருப்பதற்கு நீ வருந்துவது தக்கதில்லை. அவன் வருந்துவதே தக்கது’ என்றாள்.

நின் கடைவாயில் புகுவதும் உண்டே, அவள் புளித்த ஞான்றே! - புறத்தோற்றத்தால் இனித்துள்ள அவள் தொடர்பு விரைவில் அகத்தோற்றம் புலப்பாலல் அவனுக்குப் புளித்துப் போதல் உறுதி அக்கால் அவன் நின் புறக்கடை வாயிலில் வந்து புகுவான் என்றபடி