பக்கம்:நூறாசிரியம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

148

பற்றென்றும், இனமென்றும் தொண்டென்றும் வேறுபட்டு விளக்கமாகப் பேசப்பெறுகின்றது.

ஓர் உழவன் நிலத்தை உழுது, வித்தி, விளைவிப்பது அவனுக்கும் பிறர்க்குமே ஓர் அரசன் அரசியல் நடத்துவதும் அவனுக்கும் பிறர்க்குமே. தாயொருத்திக்குப் பிறக்கும் குழந்தைகூட அவளுக்கும் பிறர்க்கும் பயனுடையதாகும். ஆக இவ்வுலகத்திலுள்ள எந்த ஒர் உயிரும் தனக்காகவும் பிறர்க்குமாகவே தோற்றம் எடுக்கின்றது. இக்கூட்டுச் சார்பு நிலையே இறைமையின் அகவியக்கமாகும். ஒரு தாயின் உடலினின்று ஒரு சேயின் உடலை அறிவியல் வேறுபிரித்துக் காட்டலாம். ஆனால் ஒரு தாயினது மனத்தில் சுரக்கும் பிள்ளைப் பாசத்தையும் அப்பிள்ளைக்குள்ள தாய்ப் பாசத்தையும், எந்த அறிவியலும் வேறு பிரித்துவிட முடியாது. இனி, அத்தகு இரு பாசமும் வெவ்வேறு தாய்க்கும் பிள்ளைக்கும் வெவ்வேறு வகையாக அவரவர் உயிர் விளைவுக்குத் தக்கபடி சுரந்து வருவதையும் எந்த அறிவியலறிஞரும் கருவி வைத்து அளவிட முடியாது. இதன் இயக்கம் மட்டில் இயற்கையோடு பொருந்திய இயக்கமாக இறைமை இயக்கமாக மெய்யறிவியல் பேசும். இவை விரிக்கில் பெருகும். ஆனால் இப்பாட்டின் உட்பொருளாய் விளங்கித் தோன்றும் இறைமையின் இருப்பை - அதன் தனித்த உருவை நிலையினை எவரும் அறிதற்கியலாது என்னும் உண்மையை ஒருவாறு விளக்கவே இவ்வளவில் கூறப்பெற்றது என்க? என்னை, எவரும் அறியப்பெறாத ஒன்றினை ஈண்டு நீவிர் மட்டும் அறியப் பெற்றதுபோல் பேசுவது யாங்கனம் எனில், அறியப் பெற்றது 'அறியப்பெறாது என்பது தானே யன்றி 'அறியப் பெறாத அறிவை' அன்று. இதனை இன்னும் சில படி மேலே விளக்குவோம்.

ஒன்றின் அல்லது ஒருவனின் 'அறியாமை' என்னும் நிலையில் அவனுக்குள்ள தன்மை வேறு. அவனைப் பற்றி நமக்குள்ள தன்மை வேறு. அவன் ஒன்றை 'அறியேன்' என்று நம்பால் எடுத்துச் சொன்னாலொழிய , அவன் அறியாமையை நாம் அறிந்து கொள்ளல் இயலாது. 'காந்தள் மலரைக் கண்டதில்லை’ என்று ஒருவன் சொல்லும் வரை, அவன் காந்தள் மலரைக் கண்டுள்ளானா அல்லனா என்பதை நாமறிவது எங்ஙனம்? இனிக்'கண்டேன்’ என்று கூறினாலும் அவன் அதனை விளக்கினாலொழிய நமக்கு அது பற்றி விளக்கமுறுவது யாங்கன்? இனி அவன் முழுவதும் முற்றும் விளக்கினாலும், நாமே அதனைக் கண்டு அறிவது போல் அத்துணை முழுவிளக்கமும் பெறுவது இயலுமோ? இனி, நாமே அதனை முழு அளவில் கண்டு கொண்டாலும் ஒர் இயற்கையியல் வல்லுநர் கண்டு அறிவதைப் போல் விளங்கிக் கொள்ள வியலுமோ? இனி, அவ்வியற்சையியல் அறிஞரும் ஒரு மூலிகை மருத்துவர் போல் அதிலுள்ள மருத்துவப் பயன்களைத் தேர்ந்து கொள்ளல் சாலுமோ? இனி அம் மருத்துவரும், அக்காந்தள் மலர்ச்செடி விளைவதற்கு வேண்டிய தட்ப-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/174&oldid=1220650" இலிருந்து மீள்விக்கப்பட்டது