உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூறாசிரியம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

நூறாசிரியம்


34 இனிதவன் நினைவே!
சொல்லொடு புனையின் புல்லெனப் போமே;
சொல்லின் றமையின் இல்லென் றிழிமே!
ஒன்றுபா ராட்டி னொன்றுசீர் குன்றும்
நின்றுயிர் இயங்க லொன்றே சாலும்
இன்றுபோல் வதுவே எதிர்ந்தவந் நாளே
அன்றன்று புதிதவ னணைப்பே
என்றும் அகத்தது இனிதவன் நினைவே!

பொழிப்பு :

சொற்களைக் கொண்டு புனைந்துரைப்பின் (அவன் அன்பு) புல்லியதாகப் போகும். சொல்லப் பெறாமல் அமைந்துவிடின் அஃது இல்லையென்றாகும்; அந்நிலை மிக இழிந்தது! (அவன் அன்பு நிலைகளில் யாதானும் ஒன்றைப் பாராட்டியுரைப்பின், பிறிதொன்றினது பெருமை குறைவுபடும். என் உயிர் இன்றுகாறும் உடலில் நின்று இயங்குவதொன்றே(அவன் என்பால் காட்டும் அன்புக்குப்) பெருமை தருவதாகும். இன்றுபோலவே உள்ளது, அவன் முதன் முதல் வந்து என்முன் எதிர்ப்பட்ட நாள்! அன்றன்றைக்கும் புதியதாகும் அவன் அன்பு நிறைந்த தழுவல் (அவ்வன்பு நிலை யாவும்) என்றைக்கும் என் உள்ளத்தது; இனிது ஆகும், அவனைப் பற்றிய நினைவு !

விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

இல்லிருந்து அறம் பேணிவரும் தலைவியைத் தோழி, அவன் அன்பு எத்தகையது என்று வினவ, அது சொற்களைக் கொண்டு புனைந்து சொல்லுந் தகையதன்று அவ்வாறு சொல்லின் அது புல்லியதாகப் போய்விடும்; இனி, சொல்லாதும் நினக்கு விளங்காதாகையால் அஃது இல்லையோ என ஐயறவுக்கிடமாகி இழிவு பெற்றுவிடும். அவனது அன்பின் பெருமை நிகழ்ச்சிகளில் ஒன்றை எடுத்துக்கூறின் மற்றொன்று பெருமையில் தாழும்; என் உயிர் இன்றுவரை உடலில் பொருந்தியிருப்பதே அவ்வன்பின் பெருமையை உரைக்கப் போதுமான சான்றாகும்; அவன் என்முன்வந்து மகிழ்வூட்டிய அந்த முதல்நாளைப் போன்றே, இன்றும் எனக்குக் காட்சி தருகின்றான், ஒவ்வொரு நாளும் புதியதாகும் அவன் தழுவல் என்றைக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/190&oldid=1220701" இலிருந்து மீள்விக்கப்பட்டது