பக்கம்:நூறாசிரியம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

165

அவன் அன்பு என் அகத்தில் நிறைந்து இன்பம் தருகின்றது ; அவனைப்பற்றிய நினைவே எனக்கு இன்பம் தருவதாகும்’ என்று உரைத்து,தலைவனது அன்பின் பெருமையை உணர்த்துவதாகும் இப் பாட்டு.

சொல்லொடு புனையின் - சொற்களைக் கொண்டு புனைந்துரைப்பின், என்னை? 'புனையினும் புல்லென்னும் நட்பு’ என்றாராகலின், அவன் அன்பு சொற்களால் புனைந்துரைப்பது அன்று. சொற்களால் அமைந்து விடுவதன்று, என்பதாகும்.

புல்லென - புல்போல் எளிமை சான்றது. புல்லியதாக

சொல்வின் றமையின் - சொல்லாமல் அமைந்து விடுவதெனின்.

இல்லென்று இழிம் - இல்லை என்றாகி இழிந்ததுபோல் ஆகிவிடும். அவன் அன்பைப்பற்றி ஒன்றும் கூறாது அமைந்து விடுவேனாயின், ஒருவேளை அவன் அன்பாக நடந்து கொள்வதில்லையோ என்று பொருள்பட்டு அவன் பெருமைக்கே இழிவாகிவிடும்.

ஒன்று பாராட்டின் ஒன்றுசிர் குன்றும் - அவன் அன்புச் செயல்களில் ஏதானுமொன்றை எடுத்துப் பாராட்டிப் பேசின், மற்றைய வகைகளில் அவன் அன்பின் பெருமை குறைவுபடும்; ஆகையால் அதுவும் பிழையாகி விடும்.

நின்றுயிர் இயங்கல் - என் உயிர் இன்று வரை என் உடலினின்று இயங்கிக் கொண்டிருப்பதே.

ஒன்றே சாலும் - அவன் அன்பு சிறந்ததாக உள்ளதென்று அவ்வொரு நிலையினாலேயே எண்ணிக்கொள். அவ்வாறில்லையாகின் என் உயிர் என்றோ என் உடலை விட்டுக் கழிந்திருக்கும் என்பது பொருள்.

இன்று போல்வது - இன்றைக்குப் போல் உள்ளது. எதிர்ந்த அந்நாள் - அவன் என்முன் எதிர்பட்டுத் தலைக்கூடிய அந்த நாள்.

அவன் என்னைக் கூடிய முதல் நாளைப் போன்றே, இன்றும் அன்பு நிறைவால் அவன் நடந்து கொள்கின்றான் என்க.

அன்றன்று புதிது, அவன் அணைப்பு - அவனது தழுவல், ஈடுபாடு - அன்றன்றும் புதியதாகவே எனக்குப் படும்படி அவன் அன்பைப் பொழிகின்றான் என்றபடி

என்றும் அகத்தது - அவன் நிறைந்த அன்பு என்றும் என் அகத்தை ஆட்கொண்டுள்ளது.அது புறத்தே கூறுதற்கியலாதது. எனவே சொற்களால் புனைந்து கூற முடியாது என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/191&oldid=1220704" இலிருந்து மீள்விக்கப்பட்டது