பக்கம்:நூறாசிரியம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

நூறாசிரியம்


இனிதவன் நினைவு- அவன் நினைவு ஒன்றே எனக்கு இன்பம் பயப்பது. நேர்ச்சி இன்னும் இனியதாம் என்க.

'அவன் அன்பு எத்தகையது, சொல்’ எனக் கேட்கின்றாய்; அது சொல்லுந்தகையதன்று சொல்லாமல் வாளா அமைந்திருக்கும் தகையது மன்று. அவனைப் பற்றி யாதானும் ஒன்றைக் கூறுவதாயின் மற்றொன்று பெருமை இழக்கும். என் உயிர் உடலில் உறைந்திருப்ப தொன்றினாலேயே நீ உய்த்துணர்ந்து கொள், அவ்வன்பு உண்மையது என்பதை. அவ்வாறில்லாவிடின் நான் என்றோ உயிர் துறந்திருப்பேன். அவன்முதல் நாள் என்னைக் கண்டது போலவே இன்றும் நடந்து கொள்கின்றான். அவன் அன்பு ஒவ்வொரு நாளும் புதிய உணர்வை எனக்கு ஊட்டுகின்றது. அவ்வன்பு உணர்வு புறத்தே எடுத்துக் கூறற் கியலாதது உள்ளத்தே உறைந்து நிற்பது. அவன் நினைவே எனக்கு இனியதாகப் படுகின்றது . எனின், அவன் செயல்களைப் பற்றிப் பேசவும் வேண்டுமோ? வேண்டா’ என்றபடி, என்க.

இது, முல்லைத் திணையும் பெருமையின்றரியா அன்பைப் புகழ்ந்தது என்னுந் துறையுமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/192&oldid=1220708" இலிருந்து மீள்விக்கப்பட்டது