பக்கம்:நூறாசிரியம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

நூறாசிரியம்


அழகிழந்துபோகும் படியும், கண்கள் குழி விழுந்து, தோள்கள் கூனுதலுற்று, முகம் ஒளி மழுங்கி நிற்குமாறும், நுனிகள் வெடிப்புற்றுப் பூரிப்பின்றி மார்புகள் வறண்டு கிடக்கவும், அடிவயிறு மணல் அலைகள் எனுப்படி திறங்கி மடிப்புகள் எய்தவும், சூலுற்றுப் பெறுவதையே வேலையாகக் கொண்டவள் போல், அறிவில்லாத அவள், பொறுமை மிக்கவர்களும் பொறுமையிழக்கும்படி பல “குழந்தைகளை பெற்றெடுத்தவள்’ என்று பழித்தாளாக

பெறல் தந்தாள் - என்னும் எடுப்புக் குறிப்பினால், தான் இன்னும் ‘பெறாத தன்மையுடையள் என்றும் உணர்த்தினாள் என்க. இருமுறை அடுக்கால், அடிக்கடி பல குழந்தைகளைப் பெற்றவள் என்று தன் வெறுப்புத் தோன்றும்படியும், அவள் முதுமை புலப்படும்படியும் பழித்தாள் என்க.

அறம்படு நெஞ்சின் அல்லோர்க் கிணங்கி - என்றமையால், அவளை அணுகுவார் தன்மை உணர்த்தப் பெற்றது. அறமல்லாத கொடிய நெஞ்சையுடையவர்கள் தம் ஆசைக்கும் பொருளுக்கும் இணங்கியவள் என்றதால், தன் தலைவனையும் அறம்பட்ட நெஞ்சினன் என்றும், பொருள் மிகுப்பால் நெறியற்றவன் என்றும் கடிந்தாள் என்றபடி

அழல் நிற மேனி - நெருப்பைப் போலும் சிவந்த மேனி, இது, புகழ்வது போலப் பழித்ததாம். தாமரை மலர் போலும் சிவந்த மேனி என்பது போல் சொல்லாமல், நெருப்பைப் போலும் சிவந்த மேனி என்றது, அவள் உடல் குளிர்ச்சியற்று நெருப்பைப் போலும் கனலும் தன்மையுடையது கொடியது, தீயது எனற்கு, ஆனால் அத்தன்மையுடைய உடலும் இக்கால் எரிந்து சாம்பலாகவே போனது போல் காளானைப் போல், சாம்பி விட்டது என்ன ஆம்பியிற் சாம்ப என்றாள்.

குழல்உக தலைமயிர் உதிர்ந்து போகும்படி எனவே அவளுக்குத் தலைமுடி நீண்டிருந்ததைப் புலப்படுத்தினாள் என்க.

செங்கண் - செவ்வரி படர்ந்த கண் புணர்ச்சி மிகுதியில் சிவந்த கண்.

குழிந்து வெள்ளோட - குழியாகி, வெளிறு அடையும்படி, கழைதோள் கூனிக் கவின்கெட - மூங்கிலைப் போலும் அழகிய தோள், மிகுதிப் புணர்ச்சியினாலும், பிள்ளைப்பேற்றினாலும் அழகு கெடும்படி கூனுதலுற்று நிற்க,

வைகல் மதியம் போலும் - வைகறையின் முழுநிலாப் போல. விடியற்காலையின் முழுநிலவின் ஒளி படிப்படியாக மழுங்குதல் போல், முகத்தின் ஒளி மழுங்கிப் போகு மாறும்.

நுதி நுனி; முலைக்கண், வெடிப்புண்டு பலரும் வருடுதலாலும் அடிக்கடி பிள்ளை பெறுதலாலும் காய்ந்து வெடிப்புற்றுப் போகும்படியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/194&oldid=1220709" இலிருந்து மீள்விக்கப்பட்டது