பக்கம்:நூறாசிரியம்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
க.அ

இலக்கியங்களை அகப்பொருள் புறப்பொருள் என்று இருவகை யாகவும், பல்வேறு திணைகளாகளாகவும் பலப்பல துறைகளாகவும் பாகுபடுத்தமைத்த பழந்தமிழ் மரபு, கழகக் காலத்தோடு ஒருவாறு விடுபட்டுப் போயிற்று.ஆயினும் முன்னை மரபை யொட்டி இந்நூறாசிரியப் பாடல்கள் திணை துறைப் பாகுபாட்டு விளக்கங்களைத் தாங்கி நிற்கின்றன. சில பாடல்கள் புதிய துறை வகுக்கப்பட வேண்டியனவாய் உள்ளன.

தமிழிலக்கிய வரலாற்றில் தனிச் சிறப்பொடு தடம்பதித்து நிற்கும் இவ்வரிய வாழ்வியல் இலக்கியத்தை அன்பர்கள் ஊன்றிப்பயின்று பயன்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

- இறை