பக்கம்:நூறாசிரியம்.pdf/200

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

நூறாசிரியம்


37 யாங்கிதன் வலிவே


எந்தையு மன்னையு மெதிர்வறி கிலரே!
நந்திறம் பேணிய நண்பரு மறியார்;
ஏமுற மணந்த ஞான்றை யல்லது
வன்பால் வகுத்த அன்புறு வாழ்வை
யாமும் அறிகிலம் யாங்கிதன் வலியே! 5


பொழிப்பு:

எம் தந்தையும் தாயும் எதிர்ப்படும் இந்நிகழ்ச்சியை முன் கூட்டியே அறிகிலர். எங்கள் அன்பு நலன்களை விரும்பிப் பாராட்டிய நட்பினோரும் இதனை அறியமாட்டார். பெருமிதத்தோடு நாங்கள் மணந்துகொண்ட அந்தப் பொழுதிலன்றி, வலிய இயற்கை வகுத்துக் கொடுத்த அன்பு நிறைந்த இந்த வாழ்வமைப்பை, நாங்களும் அறியாதிருந்தோம் என்னே இதன் வலிவு!

விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

தலைவியைத் தலைவன் மணந்து கொண்ட அணிமைக் காலத்துத் தன் தலைவிக்கும் தனக்கும் உள்ள காதலன்பின் பெருமையை நினைந்து மகிழுமாறு, அவள் தோழியிடத்துக் கூறியதாகும் இக்கூற்று.

எந்தையும் அன்னையும்- என்று தந்தையை முன்வைத்துக் கூறியது, தனக்கு மணஞ் செய்விக்கத் தன் தந்தைக்குள்ள கடமையினை உணர்த்து வான் வேண்டி என்க. தன்னை அன்புடன் பெற்று வளர்த்த பெற்றோரும் அறியா வண்ணம் தான் தலைவியை மணஞ்செய்து கொள்ளுமாறு தூண்டிய இயற்கை யன்பின் வலிமையை உணர்த்தினான் என்க.

எதிர்வு அறிகிலர்- எதிர்பட்ட மண நிகழ்ச்சியை அறிவதற்கில்லர்.

நநதிறம் பேணிய நண்பரும் அறியார்- நம் அன்பு நலன்களைப் பாராட்டிப் பேணிய நண்பர்களும் இந்நிகழ்ச்சியை முன்கூட்டியே அறிதற்கில்லர்.

ஏமுற- பெருமை உறும்படி

மணந்த ஞான்றை யல்லது- மணந்த அப்பொழுதைக் கல்லாமல்,