பக்கம்:நூறாசிரியம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

நூறாசிரியம்

இதற்குரிய 'வித்துவம்' என்னும் வித் ( Vid) என்னும் சொல்லடியாகப் பிறந்த வடசொல்கூடத் தெரிந்து கொள்ளுதல் என்னும் பொருளினதே. Vid-to Know, இதிலிருந்துதான் தெரிந்து கொள்ளுதல் என்று பொருள்படும். வித்தை, வேதம் முதலிய வட சொற்கள் தோன்றும். Vid- என்னும் வடசொற்குரிய தமிழ் மூலமும் விழி என்பதே. Know என்னும் கிரேக்கச் சொல்லுக்குரிய தமிழ் மூலமும் 'காண்’ என்பது கண்டு அறிவதே Knowing என்பது புறநிலையறிவு அது, (பாவாணரின் வடமொழி வரலாறு காண்க)

ஆனால், கல்வி அஃதன்று.

மனத்தின் அடியில் புதைந்து கிடக்கின்ற கருத்துகள், நிலத்துள் புதைந்து கிடக்கும் செல்வங்களைப்போல் விலைமதிப்பற்றவை ஆகும். அவற்றை அகழ்ந்து அறிந்து கொள்வதே கல்வியாகும்.

‘எனவே வெறும் உலகியல் தெரிவுகளை மட்டும் தெரிந்து கொள்வதைக் கல்வி என்று நினையாதே'. என்று கூறுகின்றவர், கல்வியென்பதற்குரிய உண்மைப் பொருளை அடுத்துவரும் அடியால் விளங்குகின்றார், அது.

முட்டறப் பொருந்திய உட்புலன் முனைப்பு- என்கின்றார். முட்டற தடைகள் அற. பொருந்திய-ஏற்கனவே உயிரின் துய்ப்பினால் வந்து பொருந்தியுள்ளி. “உட்புலன், அகவறிவுப் புலன்” முனைப்பு- அதன் முனைந்து நிற்கும் தன்மைகளாகும்.

உயிரின் துய்த்தல் நுகர்வால் பெறும் உண்மையறிவை உணர்ந்து கொள்வதே கல்வியாகும் என்னும் விளக்கத்தையும் பிற அறிவு நிலைகளையும், எம் உலகியல் நூறின் வாழ்வதிகாரத்தில் கண்டு தெளிக.

இனி, அறிவமை கழகத்து அன்றன்றாயும் நெறிமுறைகளைப் பயின்று கொள்ளும் பொருட்டு எம்மைப் பிரிதலுறும் மகனே உண்கையும் உடுக்கையும் உறுபொருள் பெறுகையும் கற்றுக் கொள்வதன்று கல்வி, அது, நம் உயிரியக்கத் தடைகள் நீங்கும்படி, முன்னரே வந்து பொருந்திய உட்புலனறிவுகளைக் கண்டு கொள்வதற்கும், அவற்றினின்று மேலும் மேலும் அகழ்ந்து உண்மைகளை அறிவதற்கும் உரிய ஓர் உணர்வு முனைப்பைப் பெறுதற்கான ஒர் உத்தி என்று கண்டு கொள்க’ என்று தந்தை தன் மகனுக்கு அறிவுறுத்துவதாகும் இப்ப பாட்டு.

இது, பொதுவியல் என் திணையும், பொருண் மொழிக் காஞ்சி என் துறையுமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/210&oldid=1208943" இலிருந்து மீள்விக்கப்பட்டது