உறக்கத் தெழுந்தழி வுணர்வின சிலவே
உறக்கத் தெழுந்துயிர்ப் பூர்வன சிலவே
கண்படப் புலர்ந்த கனவின சிலவே
எண்படு கனவின் எதிர்வன சிலவே
நினைவுள் உயர்த்தழி நீர்மைய சிலவே
5
நினைவின் விளைதரு நிகழ்வின சிலவே
நிகழ்ச்சியி னுறுபயன் நேர்வன சிலவே
திகழ்தரு பயன்பிறர் தேர்வன சிலவே
பொலிவுறு வினைகளுட் புகழ்வன சிலவே ம
மலிபுகழ் வினைதரும் உயிரின சிலவே
10
உயிரொடும் உடலெனும் - உறவின சிலவே
உயிரொடும் உயிரென உறைவன சிலவே
என்றிவை தேறலின் எம்மின்
குன்றும் மறவார் குழன்மோந் தோரே!
பொழிப்பு:
ஆழ்ந்த உறக்கத்தின் கண்ணே உள்ளத்தின் அடிமனத்துள் எழுந்து, அவ்வுறக்கத்தின் கண்ணாகவே (அங்கேயே) அழிந்துபடுகின்ற உள்ளுணர்வு நிலைகள் சிலவாம் என்க. அவ்வாறு அழிந்தன போக, (உறக்கத்தின் கண்ணாக எழுந்து) அழிந்து படாமல் நின்று, என்றும் நிலைத்த உயிருணர்வைப் பற்றிக் கொண்டு, அதனொடு ஊர்ந்து திரிகின்ற உணர்வு நிலைகள் சிலவாம் என்க . அவ்வுணர்வு நிலைகள் சில வற்றுள்ளும்) அவ்வக்கால், ஆழ்ந்துறங்காது மென்துயிலாகக் கண்மூடும் பொழுதில் புற மனத்துள் தோன்றும் கனா நிலைகள் சிலவாம் என்க: அவ்வாறு தோன்றும் எண்ணப்பெறாத கனவு நிலைகளுள்ளும் எண்ணிக்கைப்படும் கனவுகளுள் நினைவுட் பொருந்துவன சிலவேயாம் என்க, அந்நினைவுட் பொருந்திய வற்றுள்ளும், அங்ஙனே, தோன்றி அங்ஙனே அழிந்தொழியும் தன்மையன சிலவாம் என்க. அவ்வாறு அழிந்தொழியாது நின்ற மிகச்சிலவுள்ளும், நனவின்கண் நிகழ்ச்சியாக விளைவு தரத் தக்கன சிலவாம் என்க. விளைந்துநின்ற நிகழ்ச்சிகளுள்ளும் உற்ற பயனுக்கு உதவுவன சிலவேயாம் என்க. அவ்வாறு பெறும்