பக்கம்:நூறாசிரியம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

203

நூறாசிரியம்

ஏர்ந்த- உயர்ந்த

ஏ, ஓ உயர்ச்சி குறிக்கும் ஓரெழுத்தொரு மொழியும் முன்னொட்டுமாம். ஏணி, ஓங்கல் என்னும் சொற்களின் முன்னொட்டுகளைக் காண்க.

பனையார்ந்த - பருமையும் அழகும் நிறைந்த,

நெடுந்தோள் பதிய நெடிய தோள்கள் அழுந்தும்படி

தலைவனை ஏறெடுத்துப் பாரா நிலையில் அவன் தோளழகு கூறியது, மெய்தொட்டுப் பயின்ற உணர்வினால் என்க.

எனையூர்ந்த காளை- என்னை மேலேறிப் புணர்ந்த காளை போன்றவன்.

எழிலிருந்தவாறு - அழகிருந்த வகையினை.

'தலைவனின் உடல் அழகையும் முக அழகையும் நேரிடையாகக் கண்டு பருக முடியாதவாறு என் நாணம் தடுத்தது. அவனை முதன் முதலாகக் கண்டு காதலித்த பொழுதும் இதற்கு வாய்ப்பில்லாமற் போயிற்று, மணந்து கொண்டு இல்லறம் பயிலும் இன்றும் அறியவியலாமற் போனது’ என்று கூறித் தன் நாண மிகுதியை உணர்த்தினாள் என்க.

இது முல்லை என் திணையும் கற்புக் காலத்துத் தலைவனது எழில்நலங்கேட்ட நொதுமலர்க்குத் தலைவி கூறியது என்னுந் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/229&oldid=1209037" இலிருந்து மீள்விக்கப்பட்டது