பக்கம்:நூறாசிரியம்.pdf/246

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

220

மாந்தர்கள் வினைகளின் பொருட்டாகப் பலவாறான முயற்சிகளில் ஈடுபட்டுப் பலவகையாக இயங்குகின்றனர். பலவேறு இடங்களுக்குப் பல்வேறு திசைகளில் அலைகின்றனர் பலவகையான உணவுப் பொருள்களை உண்கின்றனர்; பலவேறு சுவைகளை விரும்புகின்றனர். அவ்வாறே நாளிறுதியில் அவர்கள் பலவாறான இடங்களில் படுத்து உறங்குகின்றனர். ஒருவன் கையையே தலையணையாகக் கொண்டு வெட்டவெளியில் பனியில் படுத்துறங்குகின்றான் இன்னொருவன் நாரால் பின்னிய கட்டிலில் படுத்து உறங்குகின்றான், மற்றொருவன் மெல்லிய பஞ்சு பொதிந்த மெத்தையில் படுத்து அது துவளுமாறு புரண்டுருண்டு உறங்குகின்றான். ஆனால், அவ்வனைவர்க்கும் உறக்கம் என்னும் அவ் வோய்வின்ப உணர்ச்சிநிலை ஒன்றுதான்.

கையணையாக- கையே அணையாக கையைத் தலைக்கு அணையாக வைத்து.

மெய் வெளிக் கிடத்தி - மெய்யை (உடலை) வெட்ட வெளியிற் கிடத்தி அஃதாவது படுக்கக் கிடத்தி

பெய் பணிபோர்த்திய பெற்றியோர்-பெய்கின்ற பனியையே போர்வையாகப் போர்த்துக் கொண்ட தன்மையோர், அஃதாவது வெற்று மேனியுடன் வெட்ட வெளியில் படுத்துத் தூங்கும் தன்மையுடையவர்.

புனைநார்ப் பின்னிய புல்லடுக்கம் : - புனையப்பெற்ற நாரால் பின்னிய கட்டில், மூங்கில் கட்டில்.

புல்லடுக்கம் : மூங்கிலால் இணைத்துக் கட்டியது.

வினைநாள் : வினைக்குரிய நாள்.

வீழ்ந்துருள்வோர் : படுத்துப் புரள்வோர்.

மெய்யுறுத்தில்லா மேனி உறுத்தாத,

மெத்தென : மெத்தென்று உள்ள

பஞ்சின் தொய்யுள் சேக்கை : பஞ்சாலான தொய்வு உடைய படுக்கை

துவட்டியோர் : படுக்கை துவளுமாறு படுத்துருண்டு துங்குவார்.

மொய்துயில் : மொய்க்கின்ற தூக்கம் சூழ்கின்ற உறக்கம்.

செய்வினை பலவா : ஒவ்வொருவரும் செய்கின்ற வினைகள் பலவாக இருக்க

செறுவிளைவு : செறுத்த விளைவு அமைந்த பயன்.