பக்கம்:நூறாசிரியம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
49 பெண்பால் அல்லன்!

அம்ம, வாழியோ! மன்றல் ஆகுமதி:
மூப்பெதிர் கொளாநின் யாக்கை யாப்பற
நாட்பூந் தும்பை நல்லிதழ்ப் போலும்
முடிநரை சேரலும் கட்குழி வாங்கலும்
வடிநரம் பெழுந்து மெய்யொளி சுவறலும் 5
பிடியொடு நடக்கும் பெற்றியும் யாங்கெனப்
பூவா ராடை புரள உடுத்தி
முருகின் விரைமா முகம்பட அப்பி
இடக்கை தாழ ஏக்குற நடக்கும்
கல்விக் கழகத்து இளையோள் ஒருத்தியை 10
வல்லென் வாயில் மறித்து வினவ, அச்
செல்வக் குடிமகள் செறிய நோக்கிக்
கண்ணொளி கழன்றீர் போலும் ஐய,யான்
பெண்பால் அல்லன்; பிறழக் கொண்டு
வினாயினிர் என்று வெகுண்டான்;
எனாவெடுத் துரைப்பலிவ் விழிநிலைப் போக்கே! 15

பொழிப்பு:

‘அம்ம நீ வாழ்வாயாக திருமணமும் நினக்கு ஆகுக’ முதுமையை எதிர்கொள்ளாத நின் (இளைய உடல் தளர்வுறும்படி, அன்று பூத்த தும்பைப் பூவின் நல்ல (வெள்ளை) இதழ்களைப் போல நின் முடியானது நரை சேர்ந்ததும், தின் கண் குழி வாங்கியதும், வடிவு செய்யும் நரம்பானது வெளியே புலப்படும்படி எழுந்து நின்றதும், மெய்யானது ஒளி வற்றிப் போனதும், நீநன்னடைபெறாது, பிடிகளைத் தாங்கி நடக்கின்ற தன்மையும் எப்படி வாய்ந்தன எனப் பூக்கள் செறிந்த ஆடையைத் தரையில் புரளும்படி உடுத்திக் கொண்டு, முக அழகு செய்யும் மணமுள்ள மாவைப் பூசியும், இடக்கை தாழும்படி சோர்வுற நடந்து செல்லும், கல்லூரிக் கண் பயிலும் இளைய பெண் ஒருத்தியைத் திடுமென வலிந்து வழியை மறித்துக் கேட்க, அந்தச் செல்வக் குடியைச் சேர்ந்த பெண் எம்மை அடர்த்து நோக்கி, நீவிர் கண்ணொளி தவிர்ந்தீர் போலும் ! ஐயன்மிர் யான் பெண்பால் அல்லன்; என்னைப் பெண்ணென்று தவறாக எண்ணிக் கொண்டு இவ்வினாவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/248&oldid=1209058" இலிருந்து மீள்விக்கப்பட்டது