பக்கம்:நூறாசிரியம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

நூறாசிரியம்

இருக்கின்றாளே என்பதால் கவலுற்றுத் ‘திருமணம் கொள்க’ என்று வாழ்த்தினார் என்க.

யாப்புற கட்டுக் குலையும்படி யாக்கை யாப்பற என்று கூட்டி, உடல் கட்டுக் குலையும்படி என்று பொருள் கொள்க.

நாட்பூந் தும்பை - சேரலும் அன்றை நாள் பூத்த வெள்ளிய தும்பைப் பூவின் நல்ல இதழ்களைப்போலும் நிறத்தினதாய் முடிநரை சேர்ந்திருந்ததும்.

கட்குழி வாங்கலும் கண்கள் குழி வாங்கி உள்ளழுந்தியிருந்ததும்.

வடிநரம்பு எழுந்து உடலின் கண் வார்ந்த நரம்புகள் பார்க்க இயலுமாறு எழுந்திருந்ததும்.

மெய்யொளி சுவறலும் - உடலின் இளமையொளி வறண்டு போய் உடல் பளபளப்பின்றி யிருந்ததும்.

பிடியொடு நடக்கும் பெற்றியும் - இயல்பான நிமிர்ந்த நடை இன்றி, எதையாவது பிடித்துக் கொண்டு நடக்கும் தன்மையும்.

யாங்கு என - எவ்வாறு ஆகியன என்று கேட்க

பூவாராடை புரள உடுத்தி- பூக்கள் போலும் ஒவியம் நிறைந்து விளங்கும் ஆடையை மெய் துவளும்படி தளர உடுத்தி ,

முருகின் விரைமா முகம்பட அப்பி - அழகு செய்யும் மணமுள்ள மாவை முகம் நன்கு புலப்படுமாறு அழுந்தப் பூசி,

இடக்கை தாழ ஏக்குற நடக்கும் இடக்கையைப் பெண்கள் போல் தாழ வீசி, சோர்வுறும்படி நடந்து செல்லும்;

கல்வி. ஒருத்தியை கல்லூரிக் கண் பயிலும் இளம்பெண் ஒருத்தியினை.

வல்லென் ... வினவ - விரைந்து செல்லும் வழியைத் திடுமெனத் தடுத்துக் கொண்டு கேட்க

அச் செல்வக் குடி மகள் - செல்வக் குடியில் பிறந்த அந்தப் பெண்.

செறித்து நோக்கி உறுத்த நோக்கி: உற்றுப் பார்த்து.

செல்வ மிகுதியால் புன்மையும் போலிமையும் சார்ந்த நாகரிகத்தில் படிந்திருந்தானாகையால், அவ்வினா அவனுக்குச் சினத்தை எழுப்பியது; எழுப்பவே வினாவியவரை முறைத்துப் பார்த்தான் என்றபடி

கண்ணொளி கழன்றிர் போலும் - நீவிர் கண்ணொளி அவிந்து போனிர் போலும்.

ஐய, யான் பெண்பால் அல்லன் - ஐயா, யான் பெண்பாலினள் அல்லன், ஆண்பாலனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/250&oldid=1209054" இலிருந்து மீள்விக்கப்பட்டது