இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
225
பிறழக் கொண்டு வினாயினிர் - என்னைப் பெண்பாலாக எண்ணி, இக்கேள்வியை ஆண்பாலான என்னைக் கேட்டீர்.
என்று வெகுண்டான் - என்று சினத்துடன் கூறினான். எனாவெடுத் துரைப்பல் இவ்விழிநிலை போக்கே! ஆணைப்பெண்ணென்று மயங்கும்படியாக உடையுடுப்பதும் புனைந்து கொள்வதுமான இவ் விழிந்த புன்மை நாகரிகப் போக்கினை என்னவென்று எடுத்துரைப்போம்.
போலி நாகரிகப் பரவலால் நேரும் பாலியல் தோற்ற மாற்றங்களை அளவிட்டு உரைக்கவியலாது. இஃது, அப்புன்மை நாகரிகத்தால் உருவாகும் இழிவு நிலைகளுள் ஒன்று என்பதாக, என்னவென்று எடுத்துரைப்போம்’ என்னும் தொடருக்குப் பொருள் கொள்க.
இது பொதுவியல் என் தினையும், இயனிலை திரிதல் என்னும் துறையுமென்க. இயற்கை நிலை திரிந்த தன்மைகளை எடுத்துக் கூறலின் இயனிலை திரிதல் என்னும் புதுத்துறை வேண்டுவதாயிற்று.