பக்கம்:நூறாசிரியம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

235

உடுத்திலர் என்றது.

கொல் வேல் ஏந்திலர் - கொல்லும் வேலையும் ஏந்திவர்.

தடமுரசு ஆர்த்திலர் - போரின் தொடக்கம் அறிவிப்பான் வேண்டி எழுச்சி முரசும் ஆர்த்தலைச் செய்திலர்.

இடம்பொழுது அமைத்திலர் - போர் நடத்தற்குரிய இடத்தையும்,பொழுதையும் தேர்ந்து கொண்டிலர் என்பது.

வடம்பிணிப் - பூண்டிலர் - தம் கால்களில் இட்ட கயிற்று வடங்களை அறுத்துக் கொண்டு, கட்டுத் துறையினின்று வெளியேறும் மதக்களிறுகள் போல், அதர்ந்த நடை கொண்ட கால்களில் வெற்றிக்கழல் பூண்டிலர். படை மறவரல்லாத பள்ளி மாணவராகலான் அணிகள் கைதரப் பெறுதல் இலையாகலின்.

வேத்தவை-அரசரவை, வேந்தரவை வலித்தது.அரசு ஆளுமை அறியாத நிலையினர் என்றது.

யாத்த நூல் - போர் நுணுக்கங்கள் தொகுத்துக் கூறும் நூல். போர்த்திறன் பற்றி அறியாமை கூறியது.

பூத்த ---- சிவப்ப- மலர்போலும் இளமை முகம் அம்முகத்து ஒளியை உமிழ்க்கும் கண்கள். முகத்துக்கண் முத்துப் போலும் வியர்வைத்துளிகள் சார்ந்த சிவந்த துதல். இவை மாணவர்தம் இளமை நிலையையும் முயற்சி முனைப்பையுங் குறித்தன என்க.

கொள்கை பொறித்த கொடி-தமிழ் வாழ்க’ எனும் கொள்கை வரியெழுதிய கொடி

தோள் தாங்கி - தோள்களிலே சாய்த்துத் தாங்கி,

வெல்கை --- ஆகி - தமிழ் வெற்றியையும் இந்தி மொழியின் திணிப்புத் தவிர்ப்பையும் விரும்புவோராகி,

வானம்---- ஆர்த்து ஒன்று சூழ்ந்து திரண்டு, வானம் அதிரும்படி கொள்கைகளை முழக்கி.

மானம் --- இவர்- தமிழ் மானத்தையும்; தமிழர் மானத்தையும் காத்திட இவர் எழுந்தனர்.

புன்றலை - இளமைத் தலை,

முகமயிர் - முகத்து அரும்பு மீசையும் தாடை அணலும்

பால் முகம் - குழந்தைமை முகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/261&oldid=1221095" இலிருந்து மீள்விக்கப்பட்டது