பக்கம்:நூறாசிரியம்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

245


52 தேறுக நெஞ்சம்


தேறுக நெஞ்சம் வீறுகொள நின்றே!
ஈற்றப் பொலிந்தது நின்மக னிசையே!
மூத்தோர் மரபின் யாத்த முத்தமிழ்!
காத்தோர் நிரலின் தலைநின் றனனே!

மொய்ம்பொடு முதலா வம்மென் நோக்கின்
5

கல்விக் கழகத்து ஐயற் றுறந்த
செல்வத் தனிமகற் சேர்த்தினை அம்ம!
வெய்குழ லெஃகம் உமிழ்ந்துயிர் கழன்ற
மெய்யோன் தமிழ்ச்சீர் மீமிசை நிறுத்தி,

அறப்பூண் விளங்கிய ஆகம் பனிப்ப
10

மறப்பூண் பயந்தநின் வயிறு குளிர
ஆய்நினக் குரியன் அனைவர்க்கு மாகிய
உளங்கிளர் மாக்கதை உள்ளி
இளங்கிளர் உணர்வின் ஏந்தலன் றாயே!

பொழிப்பு :

தேற்றிக் கொள்க (நின் நெஞ்சத்தை பெருமை பெருமாறு நின்று) அழிவு இறுதி இல்லாமல் விளங்கி நின்றது நின்னுடைய மகனது புகழ். அறிவின் முதிர்ந்த தொன்மையோர் தம் வழிவழி முறைமையால் நிலைபெறுவித்த மூவியல் தமிழ் மொழியினைக் கட்டிக் காத்தவர் வரிசையில் முதலாக நின்றனன், அவன்! நிறைந்த வலிமையொடு, தன்னைச் சேர்ந்த அனைவரினும் முதல்வனாக வருக என்னும் நோக்கத்துடன், கல்வி கற்பிக்கப்பெறும் கலைக் கழகத்து, தன் தந்தையைத் துறந்த, உடன் பிறப்பில்லா ஒரு மகனைக் கல்வி கற்க வேண்டுமென்று சேர்த்தனை அம்ம! வெப்பமான எஃகுக்குழலாகிய வேட்டெஃகத்தினின்றும் உமிழப் பெற்ற குண்டினால், உயிர் நீங்கப் பெற்ற உடலையுடையவன், தமிழ் மொழியின் பெருமையை மேலும் உயர்நிலைக்கண் கொண்டு சேர்த்து நிலைபெறச் செய்து, வாழ்வறத்தின் சிறப்பால் விளங்கித் தோன்றிய நின் மார்பு கண்ணீரால் நனையும் படியும், மறத்திற்கே சிறப்பு தோன்றுமாறு நின்ற அவனைப் பெற்றெடுத்த நின் வயிறு குளிரும். படியும், பெற்ற தாயாகிய நினக்கு உரியவன், தான் செய்த தமிழ்காக்கும் வினையால் தமிழர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/271&oldid=1221131" இலிருந்து மீள்விக்கப்பட்டது